இந்திய அணியின் இளம் வீரர் ஜெய்ஸ்வால் தைரியமான அதே நேரத்தில் கற்றுக் கொள்ள விரும்பக்கூடிய வீரர் என இந்திய முன்னாள் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் பாராட்டி இருக்கிறார்.
தற்போது இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கு துவக்க ஆட்டக்காரராக இந்திய அணியில் ஜெய்ஸ்வால் தொடர்கிறார். இது அவருக்கு முதல் இங்கிலாந்து மண்ணில் முதல் டெஸ்ட் தொடர் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன்பாக 2023 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு இந்திய அணியில் ரிசர்வ் வீரராக இங்கிலாந்து சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
எங்களை வாவ் சொல்ல வைத்தார்
ராகுல் டிராவிட் ஜெய்ஸ்வால் குறித்து பேசும் பொழுது ” 2023 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு இந்திய அணியில் ரிசர்வ் பேட்ஸ்மேனாக ஜெய்ஸ்வால் இருந்தார். பொதுவாக போட்டிக்கு முன்பான பயிற்சி காடுகளங்கள் மிகவும் கடினமானவை. அந்த நேரத்தில் மழை பெய்து கொண்டிருந்தது. ஆடுகளங்கள் சரியாக தயாராகவில்லை. ஆனால் ஜெய்ஸ்வால் வெளியே சென்று எந்த பவுலரை எதிர்த்து விளையாடவும் தயாராக இருந்தார். அந்த நேரத்தில் ஷமி அல்லது சிராஜ் யாராக இருந்தாலும் விளையாட விரும்பினார்”
“அதை பார்க்கும் பொழுது எனக்கும் அணியில் இருந்த மற்ற பயிற்சியாளர்களுக்கும் ‘ஆஹா! அவர் கற்றுக் கொள்ள விரும்புகிறார், அவர் முன்னேற விரும்புகிறார், அவர் சிறப்பாக மாற விரும்புகிறார் என மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. நான் அவரை 19 வயதுக்கு உட்பட்ட இந்திய அணியில் பார்த்ததிலிருந்து தற்பொழுது அவர் ஷாட் வீச்சு மட்டும் வேகமாக மாறி இருக்கிறது”
நான்கு வகைகளில் விளையாடுகிறார்
“நான் ரன்கள் எடுக்க விரும்புகிறேன், எனக்கு ரன்கள் எடுப்பது பிடிக்கும், எனக்கு ரன்கள் எப்படி எடுக்க வேண்டும் என்று தெரியும், ரன்கள் எடுப்பதற்காக நான் எப்படி வேண்டுமானாலும் செல்வேன் என அவருடைய திறன்கள் நமக்கு சொல்கின்றன”
இதையும் படிங்க : முதல் டெஸ்ட்.. அதிரடியாக பிளேயிங் லெவனை வெளியிட்ட இங்கிலாந்து.. இந்திய அணிக்கு நல்ல வாய்ப்பு
“ஜெய்ஸ்வால் பேட்டிங் செய்வதை பார்த்தால் அவர் சில நேரங்களில் மிகவும் ஆக்ரோஷமாக விளையாடுவார். சில நேரங்களில் தற்காப்புடன் பேட்டிங் செய்வார். சில நேரங்களில் மிடில் ஸ்டெம்பில் இருந்து பேட்டிங் செய்வார். திடீரென லெக் ஸ்டெம்ப் சென்று பேட்டிங் செய்ய ஆரம்பிப்பார். இது உண்மையிலேயே ஒரு நல்ல பண்பு” என்று கூறியிருக்கிறார்.






