நடந்து முடிந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலிய வீரர்களில் சிலர் ஸ்லெட்ஜிங்கில் ஈடுபட்டார்கள் என தென் ஆப்பிரிக்க கேப்டன் டெம்பா பவுமா மற்றும் தென் ஆப்பிரிக்க வீரர் எய்டன் மார்க்ரம் இருவரும் தெரிவித்திருக்கிறார்கள்.
ஆஸ்திரேலியா அணிக்கு கம்மின்ஸ் கேப்டனாக வந்த பிறகு அந்த அணி வழக்கமான முறையில் களத்தில் ஆக்ரோஷமாக எதிரணியுடன் மோதுவதை நிறுத்தி இருந்தது. திறமையை வைத்து மட்டுமே மோத வேண்டும் என கேப்டன் அந்த அணியை கேட்டுக் கொண்டிருந்தார். ஆனால் மீண்டும் முக்கியமான போட்டியில் அந்த அணி வீரர்கள் சிலர் களத்தில் ஆக்ரோஷமான முறையில் வாய் பேச்சில் ஈடுபட்டு இருக்கிறார்கள்.
நான் அதைக் கேட்டேன்
இந்த நிலையில் இது குறித்து தெரிவித்திருக்கும் டெம்பா பவுமா “கடந்த இரண்டு வருடங்களாக ஆஸ்திரேலியாவுக்கு எதிராக விளையாடுவது வித்தியாசமாக இருக்கிறது. அவர்கள் விளையாடும் பொழுது மைதானத்தில் அதிகமாக சத்தம் போடுவது கிடையாது. ஆனால் அவர்கள் இன்னுமே தங்களின் உடல் மொழி மூலமாக ஆக்ரோஷமாகவே இருக்கிறார்கள். அதாவது அவர்களது திறமையின் மூலமாக ஆக்ரோஷமாக இருக்கிறார்கள். அவர்கள் இப்பொழுது அதிகம் பேசுவது கிடையாது. ஆனால் நிச்சயமாக நாங்கள் நேற்று பேட்டிங் செய்யும்பொழுது சோக்கர்ஸ் என்று எங்களை நோக்கி வார்த்தைகள் அவர்களிடமிருந்து வந்தது”
“60 ரன்களுக்கு எட்டு விக்கெட்டுகளை இவர்கள் இழந்து விடுவார்கள் என ஆஸ்திரேலிய வீரர் ஒருவர் எங்களை நோக்கி கூறினார். நான் அதை நன்றாகவே கேட்டேன். அதே சமயத்தில் மாத்திரம் ஒவ்வொருவருக்கு பிறகும் லாக் இன் லாக் இன் என வார்த்தைகளை பயன்படுத்திக் கொண்டே இருந்தார். நாம் அவர்களுக்கு எந்த விதத்திலும் வாய்ப்பை கொடுத்து விடக்கூடாது என்றும் சில குறைவான செய்திகளை மட்டுமே நாங்கள் பரிமாறிக் கொண்டோம்” என்று கூறியிருக்கிறார்.
இனி அப்படி சொல்ல முடியாது
இது குறித்து மார்க்ரம் பேசும் பொழுது “இப்படியான வார்த்தைகளை மீண்டும் இனி கேட்க வேண்டிய சூழ்நிலை வராது என்பது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. இதுவெல்லாம் உங்களை சிறப்பாக விளையாடுவதற்கு உந்தி தள்ளக்கூடியது. ஆனால் இப்படியான வார்த்தைகள் மட்டுமே நீங்கள் சிறப்பாக விளையாடுவதற்கு காரணமாக இருந்து விட முடியாது. உண்மையில் இந்த வேலையை செய்து முடித்து இருப்பது அணிக்கு மிகப்பெரிய விஷயமாக இருக்கிறது” என்று கூறி இருக்கிறார்.
இதையும் படிங்க : 76 பந்தில் சர்பராஸ் கான் ருத்ர தாண்டவம்.. பும்ராவுக்கு நடந்த சோகம்.. அகர்கர் லக்ஷ்மணன் நேரில் ஆய்வு
மேலும் கம் இன் கேப்டன் பொறுப்பில் இருந்து நகர்ந்த பிறகு மீண்டும் ஆஸ்திரேலியா அணி தன்னுடைய வழக்கமான ஆக்ரோஷத்தை களத்தில் கொண்டு வரலாம் என கிரிக்கெட் வல்லுனர்கள் கூறுகிறார்கள். மேலும் ஆஸ்திரேலியா வீரர்களில் சிலர் தென் ஆப்பிரிக்க அணியை சோக்கர்ஸ் என சீண்டி இருப்பது தற்பொழுது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.






