MLC 2025: மீண்டும் வந்தாச்சு அமெரிக்காவின் ஐபிஎல்.. இந்தியாவில் எந்த சேனலில் பார்க்கலாம்.?. முழு விவரம்

0
497

ஐபிஎல் கிரிக்கெட் தொடர் முடிவடைந்துள்ள நிலையில், அடுத்ததாக மேஜர் லீக் கிரிக்கெட் தொடர் நாளை தொடங்கவுள்ளது. கடந்த டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் நடந்த டாலஸ், நியூயார்க் மற்றும் ஃபுளோரிடா ஆகிய 3 மைதானங்களில் நடக்கவுள்ளது. இம்முறையும் 6 அணிகள் பங்கேற்க உள்ளனர். 3ஆவது ஆண்டாக நடக்கும் இந்த எம்எல்சி தொடருக்கு, இம்முறை ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

ஓடிடி மற்றும் ஒளிபரப்பு

இம்முறை எம்ஐ நியூயார்க் அணியின் கேப்டனாக நிக்கோலஸ் பூரன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். அதேபோல் எல்ஏ நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டனாக ஜேசன் ஹோல்டர், வாஷிங்டன் ஃபிரீடம் கேப்டனாக கிளென் மேக்ஸ்வெல், சியாட்டல் ஆர்கஸ் கேப்டனாக கிளாசனும், ஜேஎஸ்கே அணியின் கேப்டனாக டூ பிளசிஸும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

- Advertisement -

கடந்த சீசனில் 25 போட்டிகள் கொண்ட தொடராக நடத்தப்பட்ட நிலையில், இம்முறை 34 போட்டிகள் கொண்ட தொடராக நடக்கவுள்ளது. ஜூன் 12ஆம் தேதியான நாளை (அமெரிக்க நேரப்படி) முதல் லீக் போட்டி நடக்கவுள்ளது. இந்த போட்டிகளை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சி ஒளிபரப்பு செய்வதற்கான ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.

நேரம் என்ன?

அதேபோல் ஓடிடி-யை பொறுத்தவரை ஜியோ சினிமாஸ் செயலியில் ஒளிபரப்பாக உள்ளது. இந்த போட்டிகளில் டாலஸ் மைதானத்தில் நடக்கும் ஆட்டம் இந்திய நேரப்படி நள்ளிரவு 1.30 மணிக்கும், கலிஃபோர்னியாவில் நடக்கும் போட்டிகள் இந்திய நேரப்படி காலை 6.30 மணிக்கும், ஃபுளோரிடாவில் நடக்கும் போட்டிகளில் நள்ளிரவு 12.30 மணிக்கும் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

கடந்த முறை மும்பை நியூயார்க் அணி கோப்பையை வென்ற நிலையில், இம்முறை சிஎஸ்கே அணியின் தம்பியான ஜேஎஸ்கே அணி வெல்லுமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. ஐபிஎல் தொடரில் முதலீடு செய்துள்ள உரிமையாளர்களே இந்த தொடரிலும் முதலீடு செய்திருப்பதால், இந்திய ரசிகர்களிடையே கூடுதல் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

- Advertisement -