உலக கிரிக்கெட்டில் யாரும் எதிர்பார்க்காத வகையில் ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித் ஒருநாள் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக திடீரென அறிவித்தார். தற்போது இதற்கான காரணம் என்னவென்பது குறித்து பேசி இருக்கிறார்.
ஆஸ்திரேலியா முன்னாள் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் ஓய்வு பெற்ற விட்டு டெஸ்ட் மற்றும் டி20 கிரிக்கெட்டில் விளையாடப் போவதாக அறிவித்திருந்தார். அவருடைய ஆட்டம் வரைக்கும் டி20 கிரிக்கெட் விட ஒரு நாள் கிரிக்கெட் தான் மிகவும் சரியாக இருந்த போதும் அவர் ஓய்வு பெற்றது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.
சாம்பியன்ஸ் டிராபி உடன் முடிந்தது
இந்த ஆண்டு நடைபெற்ற ஐசிசி சாம்பியன் டிராபி தொடருக்கு ஆஸ்திரேலியா அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ் விளையாடவில்லை. இதன் காரணமாக ஸ்டீவ் ஸ்மித் ஆஸ்திரேலிய அணிக்கு கேப்டனாக தலைமை தாங்கி வந்தார். மேலும் சிறப்பாக விளையாடி அணியை அரை இறுதிக்கு கொண்டு வந்தார்.
இதைத்தொடர்ந்து அரை இறுதியில் ஆஸ்திரேலியா அணி இந்தியாவை சந்தித்தது. முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா அணிக்கு கேப்டன் சிறப்பாக விளையாடினார். ஆனால் முகமது ஷமி வீசிய ஒரு சுலபமான புல் டாஸ் பந்தை விளையாட முடியாமல் கிளீன் போல்ட் ஆகி வெளியேறினார். இந்த போட்டியில் ஆஸ்திரேலிய அணி தோல்வி அடைந்ததும் அவர் தன்னுடைய ஓய்வு முடிவை அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இப்பொழுது தேறி விட்டேன்
இதுகுறித்து பேசி இருக்கும் ஸ்டீவ் ஸ்மித் கூறும்பொழுது “வழக்கமாக நான் என் வீட்டுக்குள் எங்காவது கிரிக்கெட் பேட்டை வைத்திருப்பேன். வீட்டில் இருக்கும் பொழுது அதை எடுத்து நிழல் பேட்டிங் பயிற்சி ஏதாவது செய்வேன். ஆனால் அப்படி எதையும் செய்யக்கூடாது என ஒரு முடிவை நான் எடுத்தேன். அதற்குப் பின்னால் ஒரு காரணம் இருந்தது”
இதையும் படிங்க : எங்க ஜோ ரூட்டை விட.. விராட் கோலி தான் பெஸ்ட் பேட்ஸ்மேன்.. முக்கிய காரணம் இதுதான் – பனேசர் கருத்து
“சாம்பியன் டிராபி தொடரில் முகமது ஷமி வீசிய புல்டாஸ் பந்தை நான் தவற விட்டு அவுட் ஆனதிலிருந்து ஒரு பந்தை கூட நான் அப்படி அடித்து பயிற்சி செய்யவில்லை. அதற்குப் பிறகு இப்பொழுது தான் நான் மீண்டும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்காக பயிற்சியை ஆரம்பித்தேன். இப்பொழுது என்னுடைய கால்கள் நன்றாக நகர்கிறது. நான் இப்போது வலுவாக இருக்கிறேன். எல்லாவற்றுக்கும் தயாராகி விட்டேன்” என்று கூறியிருக்கிறார். சுலபமான பந்தை விளையாட முடியாமல் தவற விட்டதால்தான் ஓய்வு முடிவை எடுத்திருப்பதாக கூறுகிறார்!






