நடப்பு ஐபிஎல் தொடரில் பஞ்சாப் கிங்ஸ் அணியை கேப்டனாக சிறப்பாக வழி நடத்தியதோடு பேட்ஸ்மேன் ஆகவும் சிறப்பாக விளையாடிய ஸ்ரேயாஸ் ஐயர் தற்போது இந்திய வெள்ளைப்பந்து அணிகளில் வித்தியாசமான ஒரு தலைவலியை உருவாக்கி இருக்கிறார் என்று செய்திகள் தெரிவிக்கிறது.
இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் கேப்டனாக ஸ்ரேயாஸ் ஐயர் பஞ்சாப் கிங்ஸ் அணியை இறுதிப் போட்டிக்கு அழைத்துச் சென்றார். மேலும் பேட்ஸ்மேன் ஆகவும் மிகச் சிறப்பாக செயல்பட்டு 600க்கும் மேற்பட்ட ரன்கள் எடுத்தார். களத்தில் அவருடைய கேப்டன்சி மற்றும் களத்திற்கு வெளியில் வீரர்களை அரவணைத்து எடுத்துச் சென்றது என எல்லாவற்றிலும் சிறப்பாக இருந்தார்.
புதிய ஆதரவு குரல்கள்
இப்படியான நிலையில் இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கு ஸ்ரேயாஸ் ஐயர் பெயரை தேர்வுக்குழு தேர்வு செய்யவில்லை. எனவே இந்திய டெஸ்ட் அணியில் அவரை மீண்டும் உள்ளே கொண்டு வர வேண்டும் என குரல்கள் எழுந்திருக்கிறது. அதே சமயத்தில் யாராக இருந்தாலும் நல்ல பேட்டிங் ஃபார்மில் இருந்தால் இந்திய அணிக்குள் வர முடியும் என கம்பீர் தெரிவித்திருக்கிறார்.
இப்போது ஒரு நாள் கிரிக்கெட் அணியில் மட்டுமே இருந்து வரும் ஸ்ரேயாஸ் ஐயர் டி20 கிரிக்கெட் அணிகளும் இடம்பெற வேண்டும் என்றும் கூறப்பட்டு வருகிறது. அடுத்த ஆண்டு இந்தியா மற்றும் இலங்கையில் டி20 உலக கோப்பை தொடர் நடைபெற இருப்பது குறிப்பிடத்தக்கது.
ஸ்ரேயாஸ் ஐயர் தரும் தலைவலி
இந்த நிலையில் 2027 ஆம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவில் நடைபெற இருக்கும் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடருக்கு ரோகித் சர்மா நிச்சயம் கேப்டனாக தொடர்வார் என்று கூற முடியாத நிலையே இருக்கிறது. காரணம் அவருடைய பார்ம் மற்றும் உடல் தகுதி சரியாக இருந்தால் மட்டுமே அவரால் தொடர முடியும். இந்த நிலையில் ஸ்ரேயாஸ் ஐயர் இந்திய ஒரு நாள் அணியின் கேப்டனுக்கு போட்டியில் மிகவும் முன்னணியில் இருப்பதாக செய்திகள் தெரிவிக்கிறது.
இதையும் படிங்க : இங்கிலாந்துல இந்திய டீம் முழுசா தோக்கணும்.. அப்பதான் அந்த நல்லது அவங்களுக்கு நடக்கும் – மைக்கேல் கிளார்க் பேச்சு
தற்போது இந்திய ஒருநாள் அணிக்கு கேப்டனாக கில் வருவதற்கான வாய்ப்புகள் இருக்கிறது. ஆனால் ஸ்ரேயாஸ் ஐயர் ஒருநாள் கிரிக்கெட் வடிவத்தில் பேட்ஸ்மேனாக சிறப்பாக இருப்பதோடு, கேப்டனாகவும் சிறப்பாக செயல்பட முடியும் என்பதை நிரூபித்து இருக்கிறார். இதனால் ரோகித் சர்மா மற்றும் கில்லை நகர்த்தி வைத்துவிட்டு ஸ்ரேயாஸ் ஐயரை ஒருநாள் கிரிக்கெட் வடிவத்திற்கு கேப்டனாக கொண்டுவர இந்திய கிரிக்கெட் வாரியம் விரும்புவதாகவும் செய்திகள் தெரிவிக்கிறது.






