பஞ்சாப் கிங்ஸ் அணியில் இருந்த பொழுது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணி தோல்வி அடைந்து விடும் என தன்னிடம் பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் தெரிவித்ததாக தென் ஆப்பிரிக்க வீரர் மார்க்கோ யான்சன் கூறியிருக்கிறார்.
இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் பஞ்சாப் கிங்ஸ் அணி இறுதி போட்டிக்கு முன்னேறியது. இதற்கு லீக் சுற்றில் சிறந்த பங்களிப்பை மார்கோ யான்சன் கொடுத்திருந்தார். ஆனால் அவர் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டியில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக விளையாட வேண்டி இருந்ததால் முன்கூட்டியே இந்தியாவை விட்டு கிளம்பி விட்டார்.
ரிக்கி பாண்டிங் வியூகம்
கடந்த முறை பஞ்சாப் கிங்ஸ் அணியில் வேகப்பந்துவீச்சு ஆல் கவுண்டர் இடத்திற்கு சாம் கரன் வாங்கப்பட்டிருந்தார். இவர் பந்துவீச்சை விட பேட்டிங்கில் ஓரளவுக்கு நல்ல முறையில் செயல்பட கூடியவர். இதன் காரணமாக கடந்த முறை பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு சரியான பதில் யூனிட்டை அமைப்பதற்கு பிரச்சனையாக இருந்தது.
இந்த முறை கடந்த ஆண்டின் தவறை செய்யக்கூடாது என புதிய பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் பவுலிங் ஆல் ரவுண்டர் மார்க்கோ யான்சனை வாங்கினார். இதே வரிசையில் பேட்டிங் ஆல் ரவுண்டர் மார்க்கஸ் ஸ்டோய்னிசை வாங்கினார். எனவே ஒரே நேரத்தில் பேட்டிங் மற்றும் பவுலிங் இரண்டையும் வலிமைப்படுத்த முடிந்தது குறிப்பிடத்தக்கது. இதில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு மார்க்கோ யான்சன் மிக முக்கியமான வீரராக இருந்தார். அவர் பிளே ஆப் சுற்றில் விளையாட முடியாது அணிக்கு ஒரு பின்னடைவாகவே அமைந்தது.
நாங்கள் தோற்று விடுவோம் என்று சொன்னார்
இது குறித்து பேசி உள்ள மார்க்கோ யான்சன் கூறும் பொழுது “நான் ஐபிஎல் தொடரில் பஞ்சாப் கிங்ஸ் அணியில் இருந்து இந்தியாவை விட்டு கிளம்பும் பொழுது ரிக்கி பாண்டிங் என்னிடம் ‘ வாழ்த்துக்கள். உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டியில் நீங்கள் சிறப்பாக செயல்படுவீர்கள் என்று நம்புகிறேன். ஆனால் உங்கள் அணி தோற்றுவிடும் என்று நினைக்கிறேன்’ என்று சொன்னார்”
இதையும் படிங்க : 239/3.. இங்கிலாந்து ஏ டெஸ்ட்.. கேட்டு வாங்கி சதம் அடித்து அசத்திய கேஎல் ராகுல்.. இந்திய அணி அசத்தல்
“நான் அவரிடமிருந்து நிறைய கற்றுக் கொண்டிருக்கிறேன். அவர் எப்பொழுதும் எல்லா விஷயத்திலும் பாசிட்டிவ் மட்டுமே பார்ப்பார். அவர் நிறைய முறை லார்ட்ஸ் மைதானத்தில் விளையாடி இருக்கிறார். மேலும் விக்கெட் எடுப்பதற்கு கடினமான நேரத்தில் அவர் என்ன செய்தார் என்று அவரிடம் இருந்து தெரிந்து கொள்ளலாம். இது ஏதாவது ஒரு வகையில் உதவும். அதே சமயத்தில் இது எல்லா நேரத்திலும் வேலை செய்யும் என்று அர்த்தம் கிடையாது” என்று கூறியிருக்கிறார்.






