ஐபிஎல் 2025ஆம் ஆண்டு சீசனின் இறுதிப்போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி வெற்றி பெற வேண்டும் என்று முன்னாள் சிஎஸ்கே வீரர் அம்பத்தி ராயுடு ஆதரவு தெரிவித்துள்ளார். .ஆர்சிபி இறுதிப்போட்டிக்கு முன்னேறியதை வாழ்த்தி, கோப்பையை வெல்ல வேண்டும் என்று ராயுடு தனது சமூக ஊடகத்தில் பதிவிட்டார்.
இந்த சீசனில் ஆர்சிபி உண்மையிலேயே கோப்பையை வெல்ல தகுதியான அணி என்றும், ரஜத் படிதாரின் தலைமையில் முதல் பட்டத்தை வெல்ல வேண்டும் என்றும் அவர் கூறினார். மூன்று முறை சிஎஸ்கே மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுடன் ஐபிஎல் கோப்பையை வென்ற ராயுடு, ஆர்சிபி மீது தனது விமர்சனத்தை பலமுறை வெளிப்படுத்தியிருந்தார்.
அம்பத்தி ராயுடு பாராட்டு:
இதனால், இந்த அறிவிப்பு ஆர்சிபி ரசிகர்களுக்கு அதிர்ச்சியாக அமைந்துள்ளது. இது குறித்து பதிவிட்டுள்ள அவர்,”தென்னிந்தியாவின் மூன்று பெரிய நகரங்களுக்கு இடையே எப்போதும் அற்புதமான கிரிக்கெட் போட்டி இருந்து வருகிறது. இந்த சீசனில் பெங்களூரு நகரம் தனது முதல் ஐபிஎல் கோப்பையை வெல்ல வேண்டிய நேரம் வந்துவிட்டது என்று நினைக்கிறேன்.
ஆர்சிபி, கோப்பையை வீட்டுக்கு கொண்டு வாருங்கள்!” என்று அவர் தெரிவித்துள்ளார்.ஆர்சிபியின் இறுதிப்போட்டிக்கான பயணம் குறித்து பார்த்தோம் என்றால், ரஜத் படிதார் தலைமையிலான அணி, மார்ச் 22 அன்று கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடந்த தொடக்க ஆட்டத்தில், நடப்பு சாம்பியனான கொல்கத்தா நைட் ரைடர்ஸை வீழ்த்தி தனது பயணத்தைத் தொடங்கியது.
முக்கியமான 2 வீரர்கள்:
வெளியூர் ஆட்டங்களில் தோல்வியடையாமல் இருந்த இந்த அணி, சொந்த மைதான ஆட்டங்களில் ஆரம்பத்தில் தடுமாறிய போதிலும், அபாரமாக மீண்டு வந்து முதல் அணியாக பிளேஆஃப்களுக்கு தகுதி பெற்றது.விராட் கோலி இந்த அணியின் மிகச்சிறந்த பேட்ஸ்மேனாக விளங்குகிறார். 14 இன்னிங்ஸ்களில் 614 ரன்கள் குவித்து, 55.81 சராசரியுடனும், 146.53 என்ற ஸ்ட்ரைக் ரேட்டுடனும் திகழ்கிறார்.
இதையும் படிங்க: ஐபிஎல் 2025.. இறுதிப் போட்டியில் பரிசுத் தொகை எவ்வளவு? மற்ற விருதுகளுக்கு எவ்வளவு ரொக்கம்? – முழு விவரம்
இந்த சீசனில் எட்டு அரைசதங்களை அடித்து, ஐபிஎல் வரலாற்றில் எந்தவொரு பேட்ஸ்மேனும் பெறாத புதிய சாதனையைப் படைத்துள்ளார். ஆர்சிபி கோப்பையை வெல்ல வேண்டுமெனில், கோலியின் பங்களிப்பு முக்கியமானதாக இருக்கும்.அணியின் சிறந்த பவுலராக ஆஸ்திரேலிய நட்சத்திர வீரர் ஜோஷ் ஹேசில்வுட் திகழ்கிறார். 11 போட்டிகளில் மட்டுமே ஆடிய இவர், 21 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியுள்ளார்.






