நேற்று ஐபிஎல் தொடரில் இரண்டாவது தகுதி சுற்றுப்போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணி மும்பை இந்தியன்ஸ் அணியை ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் வென்று இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்று அசத்தியுள்ளது.
இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற பஞ்சாப் பந்து வீச முடிவு செய்தது. இதைத் தொடர்ந்து முதலில் பேட்டிங் செய்ய வந்த மும்பை இந்தியன்ஸ் அணிக்கு திலக் வர்மா மற்றும் சூரியகுமார் யாதவ் இருவரும் தலா 42 ரன்கள் எடுத்தார்கள். அந்த அடி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 203 ரன்கள் குவித்தது.
ஸ்ரேயாஸ் வதேரா அசத்தல்
இதற்கு அடுத்து விளையாடிய பஞ்சாப் கிங்ஸ் அணி 50 ரன்கள் தாண்டி மூன்று விக்கெட்டுகளை இழந்துவிட்டது. இதைத் தொடர்ந்து கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் நெகேல் வதேரா இருவரும் இணைந்து 47 பந்தில் 84 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து முக்கிய அடித்தளத்தை அமைத்தார்கள்.
இதில் நெகேல் வதேரா 29 பந்தில் 48 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். ஆனால் கேப்டன் சிரியா பையர் இறுதிவரை களத்தில் நின்று 41 பந்துகளில் 87 ரன்கள் குவித்து அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற வைத்தார். மேலும் நெகேல் வதேரா இதற்கு முன்பு மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
மும்பையை எனக்கு நல்லா தெரியும்
இந்த போட்டி பற்றி பேசி இருக்கும் நெகேல் வதேரா கூறும்பொழுது “இது போன்ற விளையாட்டுக்காக நான் காத்திருந்தேன். இப்படி ஒரு இரண்டாவது தகுதி சுற்றும் போட்டியில் விளையாடுவது என்னுடைய பெரிய ஆசையாக இருந்து வந்தது. இது என் மனதிற்கு மிகவும் நெருக்கமாக நீண்ட காலம் இருக்கும். நான் கடைசியாக இரண்டு ஆண்டுகள் மும்பை இந்தியன்ஸ் அணி உடன் இருந்தேன். எனவே அவர்கள் எப்படியான முயற்சிகள் செய்வார்கள் என்று எனக்குத் தெரியும். எனவே என் பேட்டிங்கில் சில விஷயங்களை மாற்றினேன்”
இதையும் படிங்க : 2 விஷயங்களை தூக்கி குப்பையில போட்டுட்டேன்.. எனக்கு இந்த மாதிரி சந்தர்ப்பம்தான் வேணும் – ஸ்ரேயாஸ் ஐயர் பேட்டி
“நான் பந்தை பார்த்து விளையாட வேண்டும் என்பதில் ஸ்ரேயாஸ் ஐயர் மிகவும் தெளிவாக இருந்தார். என்னிடம் அதை தெளிவாக கூறிவிட்டார். நான் எந்த பந்துவீச்சாளரையும் குறி வைத்து விளையாடவில்லை, பந்துக்கு மட்டுமே விளையாடினேன். மேலும் நாங்கள் பந்தை பவுண்டரியாக மாற்ற வேண்டி இருந்தது. எங்களுக்கு அது நல்லபடியாக மாறிக்கொண்டிருந்தது. ஸ்ரேயாஸ் ஐயர் ஒரு சேசிங் மாஸ்டர். இன்றும் அவர் அதை நிரூபித்தார். அவரிடமிருந்து நான் நிறைய கற்றுக் கொண்டேன். நாங்கள் இதே வேகத்தை முன்னெடுத்துச் சென்று ஆர்சிபி அணியை இறுதி போட்டியில் வெல்வோம் என்று நம்புகிறேன்” எனத் தெரிவித்திருக்கிறார்.






