தற்போது இந்திய ஏ அணி இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் செய்திருக்கிறது. இதில் முதலில் இங்கிலாந்து லயன்ஸ் அணிக்கு எதிரான அதிகாரப்பூர்வமற்ற நான்கு நாட்கள் கொண்ட முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் 557 ரன்கள் முதல் இன்னிங்சில் குவித்திருக்கிறது.
இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையே இங்கிலாந்தில் அடுத்த மாதம் ஜூன் 20ஆம் தேதி முதல் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற இருக்கிறது. இதற்கு பயிற்சி பெறும் விதமாக இந்திய ஏ அணி தற்போது இங்கிலாந்துக்கு இரண்டு அதிகாரப்பூர்வமற்ற நான்கு நாட்கள் கொண்ட டெஸ்ட் போட்டிகளை விளையாட சுற்றுப்பயணம் செய்திருக்கிறது.
சதத்தை இழந்த இரண்டு வீரர்கள்
இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற இங்கிலாந்து லயன்ஸ் பந்துவீச்சை தேர்ந்தெடுத்தது. இந்திய அணிக்கு கேப்டன் அபிமன்யு ஈஸ்வரன் 8, ஜெய்ஸ்வால் 24, நிதீஷ் குமார் ரெட்டி 7, சர்துல் தாக்கூர் 27, ரவீந்திர ஜடேஜா இடத்திற்கு பார்க்கப்படும் ஹர்ஸ் துபே 32, அன்சூல் காம்போஜ் 23, ஹர்ஷித் ரானா 16, முகேஷ் குமார் 0* ரன்கள் எடுத்தார்கள்.
இந்த நிலையில் இந்திய ஏ அணியின் பேட்டிங் வரிசையில் நான்காவது இடத்தில் வந்த சர்பராஸ் கான் 92 ரன்கள், ஐந்தாவது இடத்தில் வந்த விக்கெட் கீப்பர் துருவ் ஜுரல் 94 ரன்கள் எடுத்து துரதிஷ்டவசமாக சதத்தை இழந்து ஆட்டம் இழந்தார்கள்.
கருண் நாயர் அசத்தல் இரட்டை சதம்
இந்த போட்டியில் இந்திய அணியின் பேட்டிங் வரிசையில் மூன்றாவதாக வந்த கருண் நாயர் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் விதமாக மிகச் சிறப்பாக விளையாடி 281 பந்துகளில் 26 பவுண்டரிகள் மற்றும் 1 சிக்ஸர் உடன் 204 ரன்கள் குவித்து ஆட்டம் இழந்தார். இறுதியாக இந்திய ஏ அணி 125.1 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 557 ரன்கள் எடுத்திருக்கிறது.
இதையும் படிங்க : ஐசிசி ஒருநாள் கிரிக்கெட்டில் விதிகள் மாற்றம்.. வரும் ஜூலை மாதம் அமலாக வாய்ப்பு.. முழு விவரம்
மேலும் இங்கிலாந்து லயன்ஸ் அணியின் பந்துவீச்சில் ஜோஸ் ஹல், ஜமான் அக்தர் இருவரும் தலா 3 விக்கெட்டுகள், எட்வர்ட் ஜாக் 2 விக்கெட்டுகள், அஜித் டேல் மற்றும் ரேகான் அஹமத் இருவரும் தலா 1 விக்கெட் கைப்பற்றினார்கள். இது தொடர்ந்து இங்கிலாந்து லயன்ஸ் அணி தனது முதல் இன்னிங்சை ஆரம்பித்திருக்கிறது.






