ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு சீசன் தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. பிளே ஆப் போட்டிகள் இன்று வியாழக்கிழமை முதல் தொடங்குகிறது. ஆனால் ஒரிஜினல் அட்டவணையில் ஐபிஎல் போட்டிகள் மே 25ஆம் தேதியே முடிந்து இருக்க வேண்டும்.
இதன் காரணமாக பல வெளிநாட்டு வீரர்கள் தங்களது சொந்த நாட்டு கிரிக்கெட் தொடரில் விளையாடுவதற்காக வெளியேறி விட்டார்கள். இந்த தருணத்தில் எந்தெந்த வீரர்கள் தற்போது ஐபிஎல் தொடரில் பிளே ஆப் சுற்றில் பங்கேற்க மாட்டார்கள் என்பதை தற்போது பார்க்கலாம்.
பஞ்சாப், ஆர்சிபியிலிருந்து விலகியவர்கள்:
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் நடைபெற உள்ள நிலையில் அதில் பங்கேற்பதற்காக மார்க்கோ ஜான்சன் தென் ஆப்பிரிக்கா சென்று விட்டார். இதேபோன்று பிளே ஆப் சுற்றில் இன்று விளையாடும் ஆர் சி பி அணியும் பெரிய சிக்கலில் சிக்கிருக்கிறது.
தென்னாப்பிரிக்க வீரர் லுங்கி கிடி மற்றும் இங்கிலாந்து வீரர் ஜாக்கப் பெத்தல் ஆகியோர் பிளே ஆப் சுற்று போட்டியில் இருந்து விலகி இருக்கிறார்கள். ஒரு நாள் தொடர் போட்டியில் பங்கேற்பதற்காக ஜாக்கப் பெத்தல் இங்கிலாந்து சென்றுள்ளார். லுங்கி நிகிடி தற்போது அணியை விட்டு வெளியேறிய நிலையில் அவருக்கு பதில் ஜிம்பாப்வே வீரர் பிளெஸ்ஸிங் முசிரபாணி மற்றும் டிம் செபர்ட் ஆகியோர் சேர்க்கப்பட்டிருக்கிறார்கள்.
குஜராத், மும்பையிலிருந்து விலகிய வீரர்கள்:
இதேபோன்று குஜராத் அணியை சேர்ந்த ஜாஸ்பட்லர் மற்றும் தென்னாப்பிரிக்க வீரர் ரபாடா விலகி இருக்கிறார்கள். பட்லர் அந்த அணியின் மிகவும் முக்கியம் வாய்ந்த வீரராக விளங்குகிறார். 13 போட்டியில் அவர் 538 ரன்கள் அடித்திருக்கிறார். அவருக்கு பதிலாக குஜராத் அணி குசல் மெண்டீசை சேர்த்து இருக்கிறது.
இதையும் படிங்க: ஐபிஎல் 2025.. லீக் சுற்று முடிவில் அதிக சிக்சர், அதிக பவுண்டரி அடித்த அணிகள் எது?
மும்பை அணியில் தான் பெரிய பிரச்சனை நிலவுகிறது. ஏனென்றால் அந்த அணியின் மூன்று முக்கிய வீரர்கள் வெளியேறி இருக்கிறார்கள். ரியான் ரிக்கல்டன், வில் ஜாக்ஸ் மற்றும் கார்பின் போஸ் ஆகியோர் பிளே ஆப் சுற்றிலிருந்து விலகி இருக்கிறார்கள். அவர்களுக்கு பதிலாக மும்பை அணி ஜானி பாரிஸ்டோ, அசலங்கா மற்றும் ரிச்சர்ட் கிலீசன் ஆகியோரை சேர்த்திருக்கிறது.






