ஐபிஎல் 2025.. தவறான நேரத்தில் பார்மை இழந்தது குஜராத்.. எச்சரிக்கை விடுத்த ஆஸி ஜாம்பவான்

0
19

குஜராத் டைட்டன்ஸ் அணி, ஐபிஎல் 2025 சீசனில் தங்களது முதல் 12 போட்டிகளில் அபாரமாக ஆட்டத்தை வெளிப்படுத்தி, முதல் இரண்டு இடங்களில் ஒன்றை உறுதி செய்வது போல் இருந்தது. இருப்பினும், கடைசி இரண்டு போட்டிகளில் தோல்வியடைந்த அவர்கள் தற்போது இக்கட்டான நிலையில் சிக்கியுள்ளனர்.

லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி, செவ்வாய்க்கிழமை, மே 27 அன்று ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரை வீழ்த்தி, குவாலிஃபையர் 1-க்கு தங்களது இடத்தை உறுதி செய்ய உதவ வேண்டும் என்று கில் படை நம்புகின்றனர். ரஜத் பட்டிதார் தலைமையிலான அணி இந்தப் போட்டியில் வெற்றி பெற்றால், 2022 சாம்பியன்களான குஜராத் அணி எலிமினேட்டர் போட்டியில் விளையாட வேண்டியிருக்கும்.

- Advertisement -

தவறான நேரத்தில் சரிவு:

இந்த சீசனில் குஜராத் அணிக்கு
ரஷித் கான் ஏமாற்றமளிக்கிறார். டெல்லி கேப்பிடல்ஸுக்கு எதிரான போட்டியில், 200 ரன்கள் இலக்கை 19 ஓவர்களில் ஒரு விக்கெட்டை இழக்காமல் விரட்டி, ஷுப்மன் கில் மற்றும் சாய் சுதர்சன் ஆகியோர் அணியை மீட்டெடுத்தனர். ஆனால் கடைசி இரண்டு போட்டிகளில் அவர்களால் அணியை வெற்றிக்கு இட்டுச் செல்ல முடியவில்லை.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள முன்னாள் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டாம் மூடி, குஜராத் அணியின் பந்து வீச்சாளர்கள் தவறான நேரத்தில் ஃபார்மை இழந்து வருவதாகவும், பந்து வீச்சு கூட்டணிகள் இல்லாதது ஷுப்மன் கில் தலைமையிலான அணியை பாதிக்கிறது என்றும் கருத்து தெரிவித்தார்.

- Advertisement -

கவலை அளிக்கிறது:

இது குறித்து பேசிய அவர், “தவறான நேரத்தில் அவர்களது பல பந்து வீச்சாளர்கள் ஃபார்மை இழந்து வருவது கவலை அளிக்கிறது. இறுதிப் போட்டிகளுக்கு வரும்போது, உங்கள் பந்து வீச்சு தாக்குதலில் முழு நம்பிக்கையுடன் இருக்க வேண்டும், எல்லோரும் பின்னோக்கி பார்க்காமல், பொறுப்பை தாங்களே ஏற்க வேண்டும். அவர்களது தாக்குதலைப் பார்க்கும்போது, உண்மையில் ஒரே ஒரு பந்து வீச்சாளர் மட்டுமே நன்றாக பந்து வீசுகிறார், மற்றவர்கள் ஃபார்மைத் தேடுகின்றனர்,”

இதையும் பாருங்க: ஐபிஎல் 2025.. இந்த வீரர் அடுத்த சீசனில் மிகப் பெரிய ஆல் ரவுண்டராக வரப்போகிறார்.. விட்டோரி கருத்து

“இது சாய் கிஷோருக்கு சற்று கடுமையாக இருக்கலாம், ஏனெனில் அவர் மிகவும் நிலையாக இருந்தார், ஆனால் அவர்களால் பந்து வீச்சு கூட்டணிகளை உருவாக்க முடியவில்லை,” என்று அவர் மேலும் கூறினார்.மே 25, ஞாயிற்றுக்கிழமை, சென்னை சூப்பர் கிங்ஸுக்கு எதிராக முதல் இன்னிங்ஸில் 230/5 ரன்களை விட்டுக்கொடுத்து, 83 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்ததன் மூலம், குஜராத் அணியின் லீக் கட்ட பயணம் முடிவுக்கு வந்தது.

- Advertisement -