எனக்கு வயசு ஆயிடுச்சுனு தோண காரணமே இந்த தமிழ்நாட்டு பையன்தான்.. என் ஓய்வு அப்போதுதான் – தோனி பேச்சு

0
1697
Dhoni

இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணி தங்களுடைய கடைசி லீக் போட்டியில் குஜராத் அணிக்கு எதிராக 83 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இருக்கிறது. இந்த போட்டியில் முடிவுக்குப் பிறகு தோனி தன் ஓய்வு குறித்து பல சுவாரசியமான விஷயங்களை பேசி இருக்கிறார்.

இந்த போட்டியில் சிஎஸ்கே அணி புதிதாக அணிக்குள் கொண்டு வந்த ஆயுஸ் மத்ரே, உர்வில் படேல் மற்றும் டிவால்ட் பிரிவிஸ் மூவரும் சிறப்பான முறையில் பேட்டிங் செய்தார்கள். சிஎஸ்கே அணி 230 ரன்கள் குவிப்பதற்கு முக்கிய காரணமாக இருந்தார்கள். சிஎஸ்கே அணியின் புதிய முயற்சிகள் பழம் அளித்திருப்பது அந்த அணிக்கு நம்பிக்கையை இறுதியில் உண்டாக்கி இருக்கிறது.

- Advertisement -

தோனியின் ஓய்வும் அடுத்த ஆண்டு சவாலும்

இந்த நிலையில் அடுத்த ஆண்டு கேப்டனாக ருதுராஜ் திரும்பி வந்து விடுவார். இந்த நிலையில் கடைசி கட்ட ஓவர்களில் ரன்கள் எடுக்க தோனி தடுமாற ஆரம்பித்துவிட்டது வெளிப்படையாக தெரிகிறது. எனவே அவர் ஓய்வு எப்பொழுது? என நேரடியாக அவரை நோக்கியே இன்று போட்டி முடிவுக்குப் பிறகு கேட்கப்பட்டது.

இதற்கு அடுத்து அணியில் பேட்டிங் வரிசையில் ஒரு இடத்திற்கு சரியான பேட்டர் தேவைப்படுகிறார். மேலும் யாருக்காவது காயம் என்றால் பேட்டிங் யூனிட்டுக்கு பேக்கப் ஆக ஒரு பேட்ஸ்மேன் தேவைப்படுகிறார். எனவே சிஎஸ்கே அடுத்த ஆண்டு மினி ஏலத்திற்கு கேமரூன் கிரீன் போன்ற வரை வாங்க வர வேண்டும். இதற்கு கையில் தேவையான பணத்தை வைக்க சில வீரர்களை கழட்டி விட வேண்டியதும் இருக்கிறது. இதுவெல்லாம் சிஎஸ்கே அணிக்கு அடுத்த சவால்களாக அமைகின்றன.

- Advertisement -

என்னுடைய ஓய்வு அப்பொழுதுதான்

ஒரு போட்டி முடிவுக்கு பிறகு இது குறித்து பேசி உள்ள தோனி கூறும் பொழுது “எனது ஓய்வு குறித்து நான் முடிவெடுப்பதற்கு இன்னும் நான்கு ஐந்து மாதங்கள் இருக்கின்றன. இப்போது அதற்கு எந்த அவசரமும் கிடையாது. நீங்கள் உடலை பிட்டாக வைத்திருக்க வேண்டும். நீங்கள் சிறந்த நிலையில் இருக்க வேண்டும். கிரிக்கெட் வீரர்கள் தங்களுடைய செயல் திறன் சரியாக இல்லை என்று ஓய்வு பெற முடிவு செய்தால் 22 வயதிலேயே ஓய்வு பெற வேண்டியதாக இருக்கும். நான் வீட்டிற்கு சென்று சில மாதங்கள் ஆகிவிட்டது. எனவே ராஞ்சி சென்று ஓய்வு எடுக்க வேண்டும். சில பைக் சவாரி செய்ய வேண்டும்”

இதையும் படிங்க : 278 ரன்.. 37 பந்தில் ஹென்றி கிளாசன் ருத்ர தாண்டவம் ஆடி மாஸ் சாதனை.. ஹைதராபாத் மெகா ரெக்கார்ட்

“அதே சமயத்தில் நான் கட்டாயம் திரும்பி ஐபிஎல் தொடருக்கு வருவேன் என்றும் சொல்லவில்லை வரமாட்டேன் என்றும் சொல்லவில்லை. எனக்கு இன்னும் நேரம் இருக்கிறது என்று சொல்கிறேன். என்னுடன் பேருந்தில் தமிழ்நாட்டு இளம் வீரர் ஆண்ட்ரே சித்தார்த் அமர்கிறார். அவர் என்னை விட வயதில் 25 வயது இளையவர். அவருடன் இப்படி சேர்ந்து உட்கார்ந்திருக்கும் பொழுதுதான் எனக்கு வயதாகிவிட்டது என்றே தோன்றுகிறது” என நகைச்சுவையாக கூறியிருக்கிறார்.

- Advertisement -