தற்போது இங்கிலாந்து தொடருக்கு தேர்வு செய்து அறிவிக்கப்பட்டுள்ள இந்திய அணியின் தேர்வு மிகவும் விசித்திரமாக இருப்பதாக சஞ்சய் மஞ்ச்ரேக்கர் விமர்சனம் செய்திருக்கிறார்.
இன்று இங்கிலாந்து அணிக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கு 18 பேர் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டது. மேலும் இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் ரோஹித் சர்மா ஓய்வு பெற்றுவிட்ட காரணத்தினால் புதிய கேப்டனாக கில் அறிவிக்கப்பட்டிருக்கிறார்.
இதுவரை செய்தது என்ன?
இந்த நிலையில் தற்போது திடீரென இந்திய டெஸ்ட் அணிக்கு புதிய கேப்டனை பரபரப்பாக தேடிக் கொண்டிருப்பது குறித்து இந்திய முன்னாள் விக்கெட் கீப்பர் கிரண் மோரே கடுமையான முறையில் விமர்சனம் செய்திருக்கிறார். இதுவரை பயிற்சியாளர் மற்றும் தேர்வுக்குழு தலைவர் உறக்கத்தில் இருந்தார்களா? என்றும் கேள்வி எழுப்பி இருக்கிறார்.
மேலும் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் இந்த அணி தேர்வு மிகவும் விசித்திரமாக இருப்பதாகவும், ஆனால் இப்போதைக்கு அணியை உருவாக்க வேண்டிய தேவை இருக்கின்ற காரணத்தினால் இது குறித்து மேற்கொண்டு எதுவும் விமர்சிக்க முடியாது வாழ்த்தத்தான் முடியும் என்றும் கூறியிருக்கிறார்.
இரண்டு அதிரடி விமர்சனங்கள்
இது குறித்து முதலில் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் பேசும் பொழுது “இது ஒட்டுமொத்தமாக ஒரு விசித்திரமான அணித் தேர்வு. ஆனால் தற்போது இந்திய அணி இழப்பதற்கு எதுவும் இல்லாத நிலையில் இங்கிலாந்து செல்கிறது. இது தற்போது மாற்றத்தில் இருக்கும் ஒரு அணி. நாம் செய்ய முடிந்த சிறந்த வேலை இந்த அணியை வாழ்த்துவதாக மட்டுமே இருக்க முடியும். முதலீட்டின் மீதான வருமானத்தை பெறுவதற்கு சிறிது காத்திருக்க வேண்டும்” என்று கூறியிருக்கிறார்.
இதையும் படிங்க : IND vs ENG: பும்ரா 5 டெஸ்டிலும் முழுமையாக விளையாட மாட்டார்.. மாற்று வீரராக இந்த வீரரை தேர்வு செய்தோம்- அகார்கர்
“எனக்கு இது ஆச்சரியமாக இருக்கிறது. முழு தேர்வுக்குழுவும் மற்றும் பயிற்சியாளரும் மாற்றம் வரப்போகிறது என தயாராக இருந்திருக்க வேண்டும். இப்போது திடீரென எல்லோரும் விழித்து எழுந்து கொண்டு அடுத்த கேப்டன் யார்? என கேட்கிறார்கள். ஒன்னரை ஆண்டு காலமாக சும்மா இருந்துவிட்டு, அடுத்த கேப்டனை கண்டுபிடிக்க வேண்டிய இவர்களே கேள்வி எழுப்புகிறார்கள். இங்கிலாந்து தொடரில் எந்த அற்புதங்களும் நடக்காது. இந்திய அணி நிச்சயம் போராட போகிறது” என்று கூறியிருக்கிறார்.






