கடைசி 4 ஓவர்.. குஜராத்தை சிஎஸ்கேவிடம் சிக்க வைத்த லக்னோ.. ரசிகர்களுக்கு இன்ட்ரஸ்டிங் சம்பவம்

0
1529
IPL

இன்று ஐபிஎல் தொடரில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 32 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ் அணி வெற்றி பெற்றது. மேலும் புள்ளி பட்டியலில் முதல் இரண்டு இடங்களை பிடிப்பதற்கான போட்டி சுவாரசிய கட்டத்தை எட்டி இருக்கிறது.

இந்த போட்டியில் முதலில் டாசில் வெற்றி பெற்ற குஜராத் டைட்டன்ஸ் அணி வந்து வீச்சை தேர்வு செய்தது. லக்னோ அணியை பொறுத்தவரையில் ஜிக்வேஷ் ரதி ஒரு போட்டியில் தடை பெற்ற காரணத்தினால் விளையாடவில்லை. மேலும் ரிஷப் பண்ட் தைரியமாக 5 பந்து வீச்சாளர்களுடன் களம் இறங்கினார்.

- Advertisement -

பேட்டிங்கில் அசத்திய லக்னோ

முதலில் பேட்டிங் செய்ய வந்த லக்னோ அணிக்கு துவக்க ஆட்டக்காரர் எய்டன் மார்க்ரம் 24 பந்துகளில் 36 ரன்கள் எடுத்தார். இன்னொரு தொடக்க ஆட்டக்காரர் மிட்சல் மார்ஸ் அபாரமாக விளையாடி 64 பந்துகளில் 10 பவுண்டர்கள் மற்றும் 8 சிக்ஸர்கள் உடன் 117 ரன்கள் குவித்தார்.

இதைத்தொடர்ந்து நிக்கோலஸ் பூரன் அதிரடியாக விளையாடி 27 பந்துகளில் 4 பவுண்டர்கள் மற்றும் 5 சிக்ஸர்களுடன் 56 ரன்கள் எடுத்தார். ரிஷப் பண்ட் ஆட்டம் இழக்காமல் 2 சிக்ஸர்கள் உடன் 6 பந்தில் 15 ரன்கள் எடுத்தார். 20 ஓவர்கள் முடிவில் லக்னோ அணி இரண்டு விக்கெட் இழப்புக்கு 235 ரன்கள் குவித்தது.

- Advertisement -

கடைசி நான்கு ஓவர் அசத்தல்

இதைத் தொடர்ந்து இலக்கை நோக்கி விளையாடிய குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு சாய் சுதர்சன் 16 பந்தில் 21 ரன், கேப்டன் கில் 20 பந்தில் 35 ரன், ஜோஸ் பட்லர் 18 பந்தில் 33 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்கள். முதல் முறையாக குஜராத் டைட்டன்ஸ் மிடில் ஆர்டர் போட்டிக்கு வந்தது. இருந்த போதிலும் மிடில் ஆர்டர் சிறப்பாக விளையாடி 16 ஓவர்கள் முடிவில் மூன்று விக்கெட் இழப்புக்கு 186 ரன்கள் சேர்த்தது. மேற்கொண்டு வெற்றிக்கு நான்கு ஓவர்களில் 50 ரன்கள் தேவைப்பட்டது.

இந்த நிலையில் வில்லியம் ஓரூர்க் வீசிய 17ஆவது ஓவரில் ரூதர்போர்டு 22 பந்தில் 28 ரன்கள், ராகுல் திவாட்டியா 3 பந்தில் 2 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்கள். இந்த ஓவரிலிருந்து இருபதாவது ஓவர் முடிய ஒரு பவுண்டரி கூட குஜராத் அணியால் அடிக்க முடியவில்லை. போராடிய தமிழக வீரர் ஷாருக் கான் அதிரடியாக 29 பந்தில் 57 ரன்கள் எடுத்தார். முடிவில் லக்னோ அணி 33 ரன்கள் வித்தியாசத்தில் ஆறுதல் வெற்றி பெற்றது.

இதையும் படிங்க : 18 வருடம்.. இனியும் நடக்க வாய்ப்பு இல்லாத சாதனையை செய்த மார்ஸ்.. அதிரடி சதம்.. மாறிய களம்

தற்போது 13 போட்டிகளில் குஜராத் 18 புள்ளிகள் எடுத்து இருக்கிறது. அந்த அணியால் 20 புள்ளிகள் மட்டுமே எடுக்க முடியும். அதே சமயத்தில் ஆர்சிபி மற்றும் பஞ்சாப் இரண்டு அணிகளும் 12 போட்டியில் 17 புள்ளிகள் எடுத்து இருக்கின்றன. இந்த அணிகள் தங்களின் கடைசி இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்றால் 21 புள்ளிகள் எடுக்க முடியும். அப்போதைக்கு குஜராத் கடைசி போட்டியில் சிஎஸ்கே அணிக்கு எதிராக விளையாடுகிறது. இந்தப் போட்டியில் வென்றால் முதல் இரண்டு இடங்களில் இருக்க அதிக வாய்ப்புகள் உண்டு. சிஎஸ்கே அணி இடம் தோற்றால் முதல் இரண்டு இடங்களில் வருவதற்கான வாய்ப்பு குறைந்து விடும். தற்போது குஜராத் சிஎஸ்கே அணியிடம் சிக்கி இருக்கிறது!

- Advertisement -