நடப்பு ஐபிஎல் தொடரில் லக்னோ அணியின் கேப்டனாக இருந்து வரும் ரிஷப் பண்ட் சமூக வலைதளத்தில் அஜெண்டாவோடு செயல்படாமல் உண்மையான செய்திகளை வெளியிடுவது அவசியம் என தெரிவித்திருக்கிறார்.
இந்த ஆண்டு ஐபிஎல் சீசனுக்கான மெகா ஏலத்தில் மிக அதிகபட்ச தொகைக்கு லக்னோ அணி நிர்வாகம் 27 கோடி ரூபாய் கொடுத்து ரிஷப் பண்ட்டை வாங்கியது. மேலும் டெல்லி அணியில் இருந்து லக்னோ அணிக்கு மாறி வந்ததாலும் அவர் மீது நிறைய எதிர்பார்ப்புகள் இருந்தது.
சாதாரண விலைக்கு அசத்தல்
ரிஷப் பண்ட் ஐபிஎல் வரலாற்றில் அதிகபட்ச தொகைக்கு வாங்கப்பட்ட நிலையில் அவர் இன்னும் முழுமையாக 150 ரன்கள் கூட எடுக்கவில்லை. அவருடைய ஸ்ட்ரைக் ரேட் 100 என இருக்கிறது. அவரது மிக மோசமான பேட்டிங் ஃபார்ம் லக்னோ அணி பிளே ஆஃப் வாய்ப்பில் இருந்து வெளியேறுவதற்கு மிக முக்கியமான காரணமாக அமைந்திருக்கிறது.
அதே சமயத்தில் இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் மிகக் குறைந்த விலைக்கு வாங்கப்பட்ட அன் கேப்டு இந்திய வீரர்கள் மிகச் சிறப்பாக விளையாடி வருகிறார்கள். லக்னோ அணி ரிஷப் பண்ட் மேல் செய்த முதலீட்டை பிரித்து வேறு சில வீரர்கள் மேல் செய்து இருந்தால் வலுவான பேட்டிங் மற்றும் பவுலிங் யூனிட் அமைந்திருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
வெளியேற்றப்படும் ரிஷப் பண்ட்
இந்த நிலையில் அடுத்த ஆண்டு லக்னோ அணி ரிஷப் பண்ட்டை வெளியேற்றி 27 கோடி ரூபாயை எடுத்துக் கொண்டு மினி ஏலத்திற்கு சென்று சிறந்த அணியை உருவாக்க இருப்பதாக பத்திரிக்கையாளர் ஒருவர் சமூக வலைதளத்தில் செய்தி வெளியிட்டார். இந்த செய்தி ரிஷப் பண்ட்டை கடுமையாக கோபம் அடைய வைத்திருக்கிறது.
இதையும் படிங்க: இந்திய U19 அணி சிஎஸ்கே ஆயுஸ் மத்ரே கேப்டன்.. 14 வயது சூரியவன்சிக்கும் இடம்.. இங்கிலாந்து தொடர்
இதுகுறித்து ரிஷப் பண்ட் பேசும்போது “போலியான செய்திகள் அதிக ஈர்ப்பை தருகின்றன என்று நான் புரிந்து கொள்கின்றேன். ஆனால் அஜெண்டா இல்லாமல் உண்மையான செய்திகளை வெளியிட்டால், அது போலிச் செய்திகளை விட மிகச் சிறப்பானதாக இருக்கும். மேலும் போலிச் செய்திகளை வைத்து தேவையில்லாததை உருவாக்க வேண்டாம். இந்த நாள் இனிய நாளாக அமையட்டும். நாம் சமூக வலைதளங்களில் பொறுப்பான முறையில் விவேகமாக செய்திகளை வெளியிடுவோம்” என்று கூறியிருக்கிறார்.






