ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் நட்சத்திர தொடக்க ஆட்டக்காரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால், ஐபிஎல் 2025 முடிவடைந்த பிறகு தனது சமூக வலைதளத்தில் ஒரு பதிவை வெளியிட்டார். இதனால், அவர் அணியை விட்டு வெளியேறுகிறாரா என்ற சந்தேகங்களை கிளப்புயுள்ளது. . ராஜஸ்தான் ராயல்ஸ் அணி , தங்களது கடைசி லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக டெல்லியில் உள்ள அருண் ஜெய்ட்லி மைதானத்தில் விளையாடிது.
இதில் 188 ரன்கள் என்ற இலக்கை 17 பந்துகள் மீதமிருக்க 6 விக்கெட்டுகளுடன் வெற்றிகரமாக விரட்டி ராஜஸ்தான் அசத்தியது. இந்தப் போட்டியில் ஜெய்ஸ்வால் 19 பந்துகளில் 36 ரன்கள் எடுத்து, வைபவ் சூர்யவன்ஷியுடன் 37 ரன்கள் கொண்ட தொடக்க கூட்டணியை அமைத்தார்.
ஜெய்ஸ்வால் திடீர் பதிவு:
இந்த நிலையில் தான், அவரது இன்ஸ்டாகிராம் பதிவில், “ராஜஸ்தான் ராயல்ஸுக்கு எல்லாவற்றிற்கும் நன்றி. நாம் எதிர்பார்த்த படி சீசன் அமையவில்லை, ஆனால் நமது பயணத்திற்கு தொடர்ந்து நன்றியுடன் இருக்கிறேன். அடுத்த சவாலுக்கு மற்றும் எதிர்காலம் எதைக் கொண்டுவருகிறதோ பார்ப்போம் என்று எழுதினார்.
2020ஆம் ஆண்டு ராஜஸ்தான் ராயல்ஸால் 2.40 கோடி ரூபாய்க்கு ஒப்பந்தம் செய்யப்பட்ட இடது கை ஆட்டக்காரர் ஜெய்ஸ்வால், ஐபிஎல் இல் மிகவும் நிலையான மற்றும் நம்பகமான தொடக்க ஆட்டக்காரராக உருவெடுத்தார். ஐ.பி.எல் 2025 சீசனில் அவர் 14 போட்டிகளில் 559 ரன்கள் எடுத்து, ராஜஸ்தான் அணியின் முன்னணி ரன்-எடுத்த வீரராக திகழ்ந்தார்.
ஜெய்ஸ்வால் ஐபிஎல் ரெக்கார்ட்:
இதில் அவரது சராசரி 43.00 மற்றும் ஸ்ட்ரைக் ரேட் 159.71 ஆக இருந்தது. இதுவரை ராஜஸ்தான் அணிக்காக ஆறு சீசன்களில், 67 ஐ.பி.எல் போட்டிகளில் 2,166 ரன்களை 152.85 என்ற ஸ்ட்ரைக் ரேட்டில் எடுத்துள்ளார், இதில் 15 அரைசதங்கள் மற்றும் இரண்டு சதங்கள் அடங்கும். அவரது செயல்பாடுகள் அவரை இந்திய அணியில் மூன்று விதமான கிரிக்கெட் வடிவங்களிலும் இடம்பெறச் செய்தன.
இதையும் படிங்க: ஐபிஎல் 2025.. மும்பை அணி செய்த தவறு.. கண்டுபிடித்த நடுவர்.. விதி சொல்வது என்ன?
குறிப்பாக, 2024ஆம் ஆண்டில் டெஸ்ட் போட்டிகளில் இரண்டாவது அதிக ரன்கள் எடுத்தவராக இருந்தார், இப்போது இங்கிலாந்துக்கு தனது முதல் டெஸ்ட் சுற்றுப்பயணத்திற்கு தயாராகி வருகிறார். இதற்கிடையில், ஜெய்ஸ்வால் உள்நாட்டு கிரிக்கெட்டில் மும்பையிலிருந்து கோவாவுக்கு மாறுவதைப் பரிசீலித்திருந்தார்.
ஆனால் இறுதியில் மும்பையுடன் தொடர முடிவு செய்தார்.இந்த தருணத்தில் , ராஜஸ்தான் ராயல்ஸ் அணியுடனான அவரது எதிர்காலம் குறித்து பல ஊகங்களை எழுப்பியுள்ளது. ரசிகர்கள் மற்றும் வல்லுனர்கள் அவரது அடுத்த முடிவை ஆவலுடன் எதிர்நோக்கி உள்ளனர்,






