நாங்க நினைச்ச அந்த விஷயம் நடந்துடுச்சு.. ஆனா எங்க பசங்க இதை மட்டும் எப்பவும் செய்யணும் – தோனி பேச்சு

0
109
Dhoni

நேற்று ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் சிஎஸ்கே அணி ஆறு விக்கெட் வித்தியாசத்தில் மீண்டும் தோல்வி அடைந்தது. இந்த நிலையில் சிஎஸ்கே அணியின் உருவாக்கம் பற்றி அணியின் கேப்டன் தோனி பேசியிருக்கிறார்.

இந்த போட்டியில் இரண்டு அணிகளுமே ப்ளே ஆப் சுற்றை இழந்துவிட்டன. எனவே பத்தாவது இடத்தில் சிக்கிக் கொள்ளாமல் இருப்பதற்கு மட்டுமே முயற்சி செய்தன. இந்த நிலையில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

- Advertisement -

இளம் வீரர்கள் தரும் நம்பிக்கை

முதலில் பேட்டிங் செய்ய வந்த சிஎஸ்கே அணிக்கு ஆயுஸ் மாத்திரை 20 பந்தில் 43 ரன்கள் எடுத்தார். இன்னொரு இளம் வீரர் டிவால்ட் பிரிவீஸ் 25 பந்துகளில் 42 ரன்கள் எடுத்தார். நேற்றைய போட்டியில் இறுதியில் விளையாடிய தோனி முக்கியமான நேரத்தில் 17 பந்துகளில் 16 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டம் இழந்தார். இதன் காரணமாக சிஎஸ்கே அணி 20 ஓவர்களில் எட்டு விக்கெட் இழப்புக்கு 187 ரன்கள் எடுத்தது.

இதைத் தொடர்ந்து விளையாடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு 14 வயது இளம் வீரர் வைபவ் சூரியவன்சி அதிரடியாக விளையாடி 33 பந்தில் 57 ரன்கள், கேப்டன் சஞ்சு சாம்சன் 31 பந்தில் 41 ரன்கள் எடுத்தார்கள். அந்த அடி 17 ஓவர்களில் நான்கு விக்கெட் இழப்புக்கு இழக்க எட்டி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று கடைசி இடத்தில் தங்கும் ஆபத்திலிருந்து தப்பித்தது.

- Advertisement -

இளம் வீரர்கள் இதை செய்ய வேண்டும்

இந்த தோல்வி குறித்து பேசி இருக்கும் தோனிக்கு ஒரு பொழுது “நாங்கள் பேட்டிங் செய்த விதத்தில் நாங்கள் சரியாகவே ரன்கள் எடுத்து வந்தோம். வீரர்கள் நல்ல இன்டன்ட் காட்டி விளையாடுகிறார்கள். மேலும் எங்களுக்கு பவர் பிளேவில் பந்து வீச ஒரு கூடுதல் பந்துவீச்சாளர் தேவை. அந்தப் பகுதியில் எங்களுக்கு ஓட்டை இருந்தது. காம்போஜ் ஸ்விங் செய்யக்கூடியவர் கிடையாது. ஆனால் அவர் பந்து சீம் ஆகும். அவர் நல்ல கண்ட்ரோல் கொடுத்தார். எனவே அவர் மூன்று ஓவர்கள் வீசினார்”

இதையும் படிங்க : ஐபிஎல் வரலாற்றில் 9 வருடம் கழித்து.. டெல்லி மைதானத்தில் ஜடேஜாவுக்கு நேர்ந்த சோகம்.. ஐபிஎல் 2025.. CSK vs RR

“எங்கள் அணிக்கு பேட்டிங்கில் நடுவில் பிரிவீஸ் அதிரடியாக விளையாடி நல்ல தாக்கத்தை ஏற்படுத்தினார். இப்பொழுது இளம் வீரர்கள் இருநூறு ஸ்ட்ரைக் ரேட்டில் விளையாட வேண்டும் என்றால் அவர்களிடம் நிலைத்தன்மையை எதிர்பார்க்க முடியாது. அதே சமயத்தில் இளம் வீரர்கள் தங்கள் முதல் சீசனில் விளையாடுவது போலவே தொடர்ந்து விளையாட வேண்டும். அவர்கள் ரன்கள் கொண்டு வருவதில் சீரான தன்மையை உருவாக்க வேண்டும்” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -