இதை நான் சொல்லலாமானு தெரியல.. ஆனா அப்போ தோனி சொன்னது இப்போ சிஎஸ்கேகிட்ட இல்ல – ஆஸி டாம் மூடி பேட்டி

0
100

நடப்பு ஐபிஎல் தொடரில் மீதம் உள்ள போட்டிகள் நாளை முதல் நடைபெற இருக்கின்றன. இதில் முன்னாள் சாம்பியன் ஆன சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இன்னும் இரண்டு போட்டிகளில் விளையாட வேண்டி உள்ளது.

இந்த சூழ்நிலையில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் முன்னாள் பயிற்சியாளர் டாம் மூடி சிஎஸ்கே குறித்து சில முக்கிய விஷயங்கள் பேசி இருக்கிறார்.

- Advertisement -

சிஎஸ்கே குறித்து டாம் மூடி

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை பொறுத்தவரை இந்த சீசனில் மோசமான செயல்பாட்டை வெளிப்படுத்தி புள்ளிகள் பட்டியலில் தற்போது பத்தாவது இடத்தில் இருக்கிறது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் ருத்ராஜ் கெய்குவாட் காயம் காரணமாக தொடரின் பாதியில் இருந்து விலக அவருக்கு பதிலாக மகேந்திர சிங் தோனி மீண்டும் சென்னை அணியின் கேப்டனாக பொறுப்பேற்று அணியை வழி நடத்தி வருகிறார்.

இருப்பினும் மெகா ஆக்ஷனில் ஏற்பட்ட குளறுபடிகளின் காரணமாக தொடர்ந்து தோல்விப் பாதையில் பயணித்துக் கொண்டிருக்க, அதற்குப் பிறகு மாற்று வீரர்களை தேர்ந்தெடுத்த சென்னை அணி தற்போது மூன்று வெற்றிகளோடு கடைசி இடத்தில் இருக்கிறது. இந்த சூழ்நிலையில் சிஎஸ்கே அணி குறித்து சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் முன்னாள் பயிற்சியாளர் ஃடாம் மூடி சில முக்கிய விஷயங்கள் பேசி இருக்கிறார்.

- Advertisement -

முந்தைய ஆண்டு போல இல்லை

இதுகுறித்து அவர் விரிவாக கூறும்போது “ஒரு அணியின் தலைவர்களும் அதன் கண்ணாடிகளாக இருந்து வருகிறார்கள். அதுபோலவே சென்னை அணையின் தலைவராக இருக்கும் எம்எஸ் தோனி குறிப்பிடத்தக்க வகையில் நீண்ட காலமாகவே தலைவராக இருந்து வருகிறார். நம் அனைவருக்கும் உள்ளேயும் ஒரு நெருப்பு இருக்கிறது. சில நேரங்களில் அது எப்போது எறிய தொடங்குகிறது என்பது குறித்து நாம் அடையாளம் காண வேண்டும். இல்லையென்றால் வெளியே செல்ல வேண்டும்.

இதையும் படிங்க:ஆர்சிபி அணியால்தான் என் திட்டமே சொதப்புச்சு.. அவங்க என்னை எடுக்கலனா இதுக்கு தயாரா இருந்தேன் – ராஜத் பட்டிதார் பேட்டி

நான் பார்ப்பது சரியா? தவறா? என்று தெரியவில்லை. ஆனால் முந்தைய ஆண்டுகளில் நான் சிஎஸ்கே அணியில் பார்த்த தீப்பொறி அங்கு நிச்சயமாக இல்லை என்பதை மட்டும் என்னால் சொல்ல முடியும்”என்று அவர் கூறியிருக்கிறார். அதாவது தோனி சில வருடங்களுக்கு முன்பாக சென்னை அணியில் இளம் வீரர்களிடம் தீப்புரை இல்லை என பேசி இருந்தார். தற்போது டாம் மூடி இதே கருத்தை இப்போது பேசி இருக்கிறார். இந்த சரியான வீரர்கள் இல்லாமல் தோல்வி பாதையில் தத்தளித்துக் கொண்டிருந்த சென்னை அணி அதற்குப் பிறகு சரியான மாற்று வீரர்களை இந்த ஐபிஎல் தொடரிலேயே வாங்கி அறிவுப்பூர்வமாக செயல்பட்டுள்ளது. எனவே அடுத்த வருடம் சென்னை அணி வலுவான வீரர்களோடு களமிறங்கும் என்று எதிர்பார்க்கலாம்.

- Advertisement -