ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கான பரிசுத் தொகையை பெருமளவில் உயர்த்தியுள்ளது. வரும் ஜூன் 11 முதல் 15 வரை லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெறவுள்ள இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியாவும் தென்னாப்பிரிக்காவும் மோதவுள்ளன.
இதில் வெற்றிபெறும் அணி 30 கோடி ரூபாய்க்கு பரிசாகப் பெறும். இது முந்தைய இரு இறுதிப்போட்டிகளில் வெற்றியாளர்கள் பெற்ற 1.6 மில்லியன் டாலர்களை விட இரு மடங்கு அதிகமாகும்.
இறுதிப்போட்டியில் தோல்வியடையும் அணிக்கு 2.1 மில்லியன் டாலர்கள் கிடைக்கும், இது முந்தைய வெற்றியாளர்களின் பரிசுத் தொகையை விட அதிகம்.
பரிசுத் தொகை அதிகரிப்பு:
முந்தைய இறுதிப்போட்டிகளில் தோல்வியடைந்த அணிகள் 800,000 டாலர்களைப் பெற்றன. இந்த பரிசுத் தொகை உயர்வு, டெஸ்ட் கிரிக்கெட்டை மேம்படுத்தவும், அதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தவும் ஐசிசி மேற்கொண்ட முயற்சிகளை பிரதிபலிக்கிறது. மூன்றாவது டெஸ்ட் சாம்பியன்ஷிப் சைக்கிளில் தென்னாப்பிரிக்கா 69.44 சதவீத புள்ளிகளுடன் முதலிடத்தையும், ஆஸ்திரேலியா 67.54 புள்ளிகளுடன்
இரண்டாம் இடத்தையும் பிடித்தன. இந்தியா 50.00 புள்ளிகளுடன் மூன்றாம் இடத்தைப் பெற்றது. தென்னாப்பிரிக்கா, இலங்கை மற்றும் பாகிஸ்தானுக்கு எதிரான தொடர்களில் 2-0 என வெற்றிபெற்று அபாரமாக செயல்பட்டது.
ஐசிசி தலைவர் ஜெய் ஷா, இந்த சாம்பியன்ஷிப் சைக்கிள் மிகவும் சுவாரஸ்யமாக இருந்ததாகவும், இறுதிப்போட்டி வரை எந்த அணி முதலிடம் பிடிக்கும் என்பது தீர்மானிக்கப்படாமல் இருந்ததாகவும் கூறினார்.
பைனல் குறித்து கேப்டன் கருத்து:
“ஆஸ்திரேலியாவும் தென்னாப்பிரிக்காவும் மோதும் இறுதிப்போட்டி, கிரிக்கெட் ரசிகர்களுக்கு உயர்தர டெஸ்ட் கிரிக்கெட்டை வழங்கும். லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெறும் இந்தப் போட்டி, உலகெங்கிலும் உள்ள ரசிகர்களுக்கு மறக்க முடியாத அனுபவமாக இருக்கும்,” என்றார்.
இதையும் படிங்க: பார்டர் கவாஸ்கர் தொடரில் கடைசியாக விளையாடி ஓய்வு பெற்ற இந்திய கிரிக்கெட் வீரர்கள் பட்டியல்
இது குறித்து பேசிய
தென்னாப்பிரிக்க அணியின் கேப்டன் டெம்பா பவுமா, “ஐசிசி பட்டத்தை வெல்வதற்கு இது ஒரு சிறந்த வாய்ப்பு,” என்று தெரிவித்தார். ஆஸ்திரேலிய கேப்டன் பேட் கம்மின்ஸ், “லார்ட்ஸில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பை பாதுகாக்கும் வாய்ப்பு பெருமையளிக்கிறது. கடந்த இரு ஆண்டுகளாக எங்கள் அணி கடினமாக உழைத்து இந்த இடத்தை அடைந்துள்ளது,” என்றார்.






