ரோகித் விராட் ஓய்வு.. 2 இடங்களுக்கு போட்டியிடும் 5 இளம் வீரர்கள்.. யாருக்கு வாய்ப்பு கிடைக்கும்? – முழு தகவல்கள்

0
839
Virat

இந்திய அணியின் நட்சத்திர வீரர்களான ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரும் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றிருக்கிறார்கள். இவர்களுடைய இடத்திற்கு 5 வீரர்கள் போட்டியிடும் நிலையில் யாருக்கு வாய்ப்பு கிடைக்கும்? என்பது குறித்து பார்க்கலாம்.

இந்திய டெஸ்ட் அணி ஐபிஎல் தொடர் முடிவடைந்ததும் அடுத்த மாதம் ஜூன் 20ஆம் தேதி முதல் இங்கிலாந்து அணிக்கு எதிராக அவர்களது நாட்டில் ஐந்து போட்டிகள் கொண்ட மெகா டெஸ்ட் தொடரில் விளையாடுகிறார்கள். இது நான்காவது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சைக்கிளின் துவக்க தொடராக இரு அணிகளுக்கும் அமைவது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

போட்டியிடும் ஐந்து வீரர்கள்

தற்போது விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா இருவரும் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்று விட்டார்கள். ஒருவர் துவக்க ஆட்டக்காரர் மற்றும் இன்னொருவர் மிக முக்கியமான நான்காவது இடத்தில் விளையாடக்கூடியவர். இந்த இரண்டு இடங்களுமே டெஸ்ட் கிரிக்கெட்டில் மிக மிக முக்கியமானவை. குறிப்பாக நான்காவது இடம் பழைய பந்தில் அணிக்கு தேவையான ரன்களை தவறாமல் கொண்டு வர வேண்டிய இடம்.

தற்போது இவர்கள் இருவர் இடத்திற்கு ருதுராஜ், சாய் சுதர்சன், ஸ்ரேயாஸ் ஐயர், கருண் நாயர், தேவ்தத் படிக்கல் என மொத்தம் ஐந்து வீரர்கள் போட்டியிடுகிறார்கள். இதிலிருந்து இரண்டு வீரர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும். அந்த இரண்டு வீரர்கள் யார் என்பதில் தான் நிறைய கேள்விகள் சென்று கொண்டிருக்கிறது.

- Advertisement -

யார் அந்த இரண்டு வீரர்கள்?

இந்த ஐந்து வீரர்களில் சாய் சுதர்சனுக்கு முதலில் வாய்ப்பு கொடுக்கப்படும் என்று வெளியில் பேசப்படுகிறது. அதே சமயத்தில் ஏற்கனவே அணியில் இடம் பிடித்து விளையாடி வரும் தேவ்தத் படிக்கல் போட்டி அளிக்கக் கூடியவராக இருக்கிறார். ஆனாலுமே அவருக்கு வாய்ப்புகள் கொஞ்சம் குறைவு என்று சொல்லப்படுகிறது.

இதையும் படிங்க : விராட் கோலி டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு.. உருக்கமாக வெளியிட்ட அறிக்கை.. ரசிகர்கள் சோகம்

மேலும் கருண் நாயர் இங்கிலாந்து கவுண்டி கிரிக்கெட்டில் சிறப்பாக விளையாடி வருகிறார் என்பதால், மேலும் சுழல் பந்துவீச்சிக்கு எதிராக சிறப்பாக விளையாடக் கூடியவர் என்பதாலும், இரண்டாவது வீரருக்கான இடத்தில் இவருக்கு வாய்ப்பு கொடுக்கப்படலாம் என்று பேசப்படுகிறது. ஆனால் கம்பீர் மற்றும் அகர்கர் இருவரும் என்ன முடிவு எடுக்கிறார்கள்? என்று பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.

- Advertisement -