2025 ஐபிஎல் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.. மீண்டும் எப்பொழுது எங்கு நடக்கும்? – வெளியான செய்திகள்

0
602
IPL

தற்போது இந்திய கிரிக்கெட் வாரியத்தால் இந்தியாவில் நடத்தப்பட்டு வந்த ஐபிஎல் டி20 லீக் தொடர் தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக இந்திய கிரிக்கெட் வாரியம் தெரிவித்திருக்கிறது.

இந்தியா பாகிஸ்தானுக்கு இடையே ஏற்பட்டிருந்த பதட்டம் அதிகரித்ததை தொடர்ந்து நேற்று பஞ்சாப் மற்றும் டெல்லி அணிகள் இமாச்சல் பிரதேஷ் தரம்சாலா மைதானத்தில் மோதிய போட்டி பாதியிலேயே நிறுத்தப்பட்டது. தற்பொழுது தொடர் முழுவதுமாக தற்காலிகமாக நிறுத்தப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

- Advertisement -

தென்னிந்தியாவில் நடத்த முடியும்

இந்தியா மற்றும் பாகிஸ்தான் இரு நாடுகளுக்கு இடையே பதட்டம் மிக பெரிய அளவில் அதிகரித்து விட்ட காரணத்தினால் தற்பொழுது ஐபிஎல் தொடரை தற்காலிகமாக நிறுத்தி வைக்க பிசிசிஐ முடிவு செய்திருக்கிறது. இந்த முடிவு பெரும்பாலும் பலராலும் வரவேற்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்திய கிரிக்கெட் வாரியம் மற்றும் இந்திய அரசு நிலைத்திருந்தால் தென்னிந்தியாவில் மீதம் இருக்கும் ஐபிஎல் தொடரை நடத்தி இருக்க முடியும். ஆனால் நாடு சிக்கலான நிலைமையில் இருக்கும் பொழுது ஒரு பக்கத்தில் கேளிக்கைகள் நடத்தப்படுவது சரியானது கிடையாது என்பதால் ஐபிஎல் தொடரை தற்காலிகமாக நிறுத்தி விட்டார்கள்.

- Advertisement -

மீண்டும் ஐபிஎல் எப்போது தொடங்கும்?

தற்போது கிடைக்கும் செய்திகளின்படி இந்திய அணி ஜூன் இருபதாம் தேதி இங்கிலாந்து சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இந்த டெஸ்ட் தொடர் முடிவடைந்த பிறகு இந்தியாவில் மீண்டும் ஐபிஎல் தொடர் நடத்தப்படுவதற்கு அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.

இதையும் படிங்க : 72 பந்துகள்.. ரிஷப் பண்ட்டுக்கு நடந்திருக்கும் பெரும் சோகம்.. வரலாறு காணாத பரிதாபம்

மேலும் இந்த முறை ஆசியக் கோப்பை நடத்தப்படுவதற்கான வாய்ப்புகள் இல்லை என்று தெரிகிறது. இதன் காரணமாக ஆசிய கோப்பை நடத்தப்படும் காலகட்டத்தில் இந்தியாவில் வைத்து ஐபிஎல் தொடரை நடத்த பிசிசிஐ முடிவு செய்திருப்பதாக சில தகவல்கள் தெரிவிக்கின்றன. எப்படியும் இந்த இரண்டு காலகட்டத்தில் மீதம் இருக்கும் ஐபிஎல் தொடர் நடத்தி முடிக்கப்பட்டுவிடும் என்பது தெரிகிறது!

- Advertisement -