தற்போது சிஎஸ்கே அணிக்கு வந்திருக்கும் மூன்று மாற்று வீரர்களில் ஒரு வீரர் கெயில் ஆர்சிபி அணிக்கு தந்த தாக்கத்தைப் போல சிஎஸ்கே அணிக்கு தருவார் என முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் டாம் மூடி கூறியிருக்கிறார்.
நேற்று சிஎஸ்கே அணி கேகேஆர் அணிக்கு எதிரான போட்டியில் இரண்டு விக்கெட் வித்தியாசத்தில் இளம் வீரர்கள் அதிரடியில் வெற்றி பெற்றது. ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே தான் விளையாடிய பன்னிரண்டாவது போட்டியில் மூன்றாவது வெற்றியை பெற்று புள்ளி பட்டியலில் பத்தாவது இடத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது.
தோனியின் மாஸ்டர் பிளான்
இந்த ஆண்டு ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலத்தை சிஎஸ்கே அணி நிர்வாகம் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளமிங் தலைமையில் சென்று சந்தித்தது. ஆனால் இந்த ஏலக்குழு மாறிவரும் கிரிக்கெட்டுக்கு ஏற்ற வகையில் சிஎஸ்கே அணிக்கு வீரர்களை தேர்வு செய்யவில்லை. இதன் காரணமாக சிஎஸ்கே அணி வரலாற்றில் நடப்பு ஐபிஎல் சீசன் மிக மோசமானதாக மாறியிருக்கிறது.
இந்த நிலையில் தொடரின் இடையில் சுதாரித்துக் கொண்ட தற்போது தற்காலிக கேப்டனாக இருக்கும் தோனி மினி ஏலத்திற்கு செல்லாமலேயே தற்போது சிஎஸ்கே அணியை சீரமைக்கும் வேலை யில் ஈடுபட்டிருக்கிறார். தற்போது மாற்று வீரர்களாக ஆயுஸ் மத்ரே, டிவால்ட் பிரிவிஸ் மற்றும் உர்வில் படேல் என 3 இளம் அதிரடி வீரர்கள் உள்ளே வந்திருக்கிறார்கள். ஏறக்குறைய சிஎஸ்கே அணியின் ஓட்டைகளை அடைத்து விட்டார் என்று சொல்லலாம்.
இந்த பையன் கெயில் போல வருவார்
இந்த நிலையில் ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் டாம் மூடி தற்போது சிஎஸ்கே அணிக்கு மாற்று வீரர்களாக வந்திருக்கும் மூன்று வீரர்களில் ஒருவர் ஆர்சிபி அணிக்கு கெயில் மாற்றுவீராக வந்து தந்த தாக்கத்தை போல நீண்ட வருடம் தருவார் என்று கூறியிருக்கிறார்.
இதையும் படிங்க : இந்திய டெஸ்ட் அணியின் கேப்டனாக ஏன் பும்ரா வாங்க கூடாது.. 5 காரணங்கள் இதோ
இது குறித்து டாம் மூடி பேசும்பொழுது “கடந்த 10 ஆண்டுகளில் சிஎஸ்கே அணி நிர்வாகம் செய்த மிகச்சிறந்த ஒப்பந்தம் எதுவென்றால் டிவால்ட் பிரிவிசை மாற்று வீரராக ஒப்பந்தம் செய்ததுதான். பெங்களூர் அணிக்கு கெயில் மாற்றுவீரராக ஒப்பந்தம் செய்யப்பட்டு ஐபிஎல் தொடரில் அந்த அணிக்கு ஆதிக்கம் செலுத்தினார். அப்படியான ஒரு ஒப்பந்தமாக இதை நான் பார்க்கிறேன்” என்று கூறியிருக்கிறார்.






