வாய்ப்பு கிடைக்காம டிவியில் கிரிக்கெட் பார்த்துக் கொண்டிருந்தேன்.. இது எல்லாமே அவரோட பிளான்தான் – டெவால்ட் ப்ரவிஸ்

0
752

நேற்று நடைபெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

இந்த வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்த சிஎஸ்கே அணியின் மிடில் வரிசை பேட்ஸ்மேன் டெவால்ட் பிரவிஸ் சில முக்கிய விஷயங்கள் பேசி இருக்கிறார்.

- Advertisement -

சிஎஸ்கே சிறப்பான வெற்றி

நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 179 ரன்கள் குவித்தது. கொல்கத்தா அணியை பொறுத்தவரை கேப்டன் ரகானே அதிகபட்சமாக 33 பந்துகளில் 48 ரன்கள் குவித்தார். இறுதிக்கட்டத்தில் அதிரடியாக விளையாடிய ஆன்ட்ரே ரசல் 21 பந்துகளில் 4 பவுண்டரி மற்றும் 3 சிக்சர் என 38 ரன்கள் குவித்தார்.

அதற்குப் பின்னர் வெற்றி இலக்கை நோக்கி விளையாட ஆரம்பித்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு தொடக்கம் சிறப்பாக அமையவில்லை. மூன்றாவது வரிசை பேட்ஸ்மேன் உர்வில் பட்டேல் 11 பந்துகள் விளையாடி 31 ரன்கள் குவிக்க, மிடில் வரிசை பேட்ஸ்மேன் டெவால்ட் ப்ரவிஸ் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி 25 பந்துகளில் 4 பவுண்டரி மற்றும் 4 சிக்ஸர் என 52 ரன்கள் குவித்து அமர்க்கள படுத்தினார். இது சிஎஸ்கே வெற்றி பெற முக்கிய காரணமாக அமைந்தது. இறுதியில் சென்னை அணி 19. 4 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 183 ரன்கள் குறித்து வெற்றி பெற்றது.

- Advertisement -

ரசிகர்கள் உண்மையில் அற்புதமானவர்கள்

இந்த வெற்றிக்கான காரணம் குறித்து ப்ரெவிஸ் கூறும்போது “இந்தத் தருணம் சிறப்பாக உள்ளது. இதை செய்ய திறமையை கொடுத்த கடவுளுக்கு இந்த தருணத்தில் நன்றி சொல்ல விரும்புகிறேன். இது ஒரு சுவாரசியமான போட்டியாக இருந்தது. விக்கெட்டுகள் விரைவாக இழந்ததால் ஆடுகளத்திற்கு தகுந்தவாறு உடனே என்னை மாற்றியமைக்க வேண்டி இருந்தது. முடிந்தவரை நிலைமையை நமக்கு சாதகமாக மாற்றி அதற்கு தகுந்தவாறு விரைவாக செயல்பட ஆரம்பிக்க வேண்டும். நான் எவ்வளவு அதிகமாக விளையாடுகிறேனோ அவ்வளவு என் வழியை கண்டுபிடிப்பேன். எனக்கு உண்மையாக இருக்க விரும்புகிறேன்.

இதையும் படிங்க:பிரிவிஸ்க்கு அதுக்காக நன்றி சொல்லிக்கிறேன்.. டீம்ல இந்த விஷயத்தை பாக்கவே ஹேப்பிதான் – தோனி பேட்டி

என்னால் ஒரு நீண்ட இன்னிங்ஸ் விளையாட முடியும் என்பது எனக்கு நன்றாக தெரியும். ஐபிஎல் தொடரில் விளையாடுவது உண்மையில் நம்ப முடியாத ஒரு விஷயமாகும். சிஎஸ்கே ரசிகர்கள் உண்மையிலேயே அற்புதமானவர்கள். இது சிறந்த கிரிக்கெட், நிறைய வேடிக்கை உயர்மட்ட நிலை என அனைத்திலும் நீங்கள் சோதிக்கப்படுவீர்கள். இது எனக்கு மிகவும் பசியை ஏற்படுத்தியது. சில வாரங்களுக்கு முன் நான் வாய்ப்பு கிடைக்காமல் சோபாவில் அமர்ந்து நிறைய விளையாட்டுகளை பார்த்துக் கொண்டிருந்தேன் இப்போது இங்கே விளையாடிக் கொண்டிருக்கிறேன். ஆனால் நான் என் செயல்முறையையும் கடவுளின் திட்டத்தையும் நம்பினேன். இங்கே இருப்பதற்கு நன்றி உள்ளவனாக இருக்கிறேன்” என்று பேசி இருக்கிறார்.

- Advertisement -