ஐபிஎல் கிரிக்கெட் தொடர் முடிவடைந்த உடன் இந்திய அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட இருக்கிறது.
இதற்கான அணி தேர்வு மும்மரமாக நடந்து வரும் நிலையில் ரோகித் சர்மா டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து தற்போது ஓய்வை அறிவித்திருக்கிறார்.
இந்தியா இங்கிலாந்து டெஸ்ட்
இந்திய கிரிக்கெட் அணியின் முக்கிய வீரர்கள் தற்போது ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறார்கள். மே மாத இறுதியில் இந்த தொடர் முடிவடைந்ததும் இந்திய அணி ஜூன் மாதம் இங்கிலாந்து அணிக்கு எதிரான ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரை இங்கிலாந்தில் விளையாட இருக்கிறது. இதற்கான வீரர்கள் தற்போது பிசிசிஐயால் பரிசீலிக்கப்பட்டுவரும் நிலையில் ரோஹித் சர்மாவே இந்த அணிக்கு கேப்டனாக தொடர்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் ரோஹித் சர்மா சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கு முன்பாக ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் மற்றும் நியூசிலாந்து அணிக்கு எதிரான மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் மோசமான தோல்வியை சந்தித்தது. வெள்ளைப் பந்து கிரிக்கெட்டில் ரோஹித் சர்மாவின் கேப்டன்ஷிப் சிறப்பாக இருக்கும் நிலையில் சிவப்பு பந்து கிரிக்கெட்டில் அவரது செயல்பாடு பிசிசிஐக்கு போதுமான நம்பிக்கையை கொடுக்கவில்லை. இந்த சூழ்நிலையில் இங்கிலாந்து தொடருக்காக இளம் கேப்டனை பார்ப்பதாக பிசிசிஐ தரப்பில் இருந்து தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த சூழ்நிலையில் சற்று முன்பு ரோகித் சர்மா டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுகிறார் என்கிற அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவந்துள்ளது. எனவே தற்போது தேர்வுக்குழு ஒரு இளம் கேப்டனை விரும்புவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது
ஓய்வை அறிவித்த ரோகித்
இது குறித்து வெளியான அந்த தகவலில் ” தேர்வாளர்களின் சிந்தனை செயல்முறை தெளிவாக உள்ளது. இங்கிலாந்து தொடருக்காக அவர்கள் ஒரு புதிய தலைவரை விரும்புகிறார்கள். சிவப்பு பந்து கிரிக்ககெட்டில் ரோகித் சர்மாவின் பார்ம் பொருத்து அவர் கேப்டன் ஆக பொருந்தாமல் இருக்கிறார். அடுத்த டெஸ்ட் சுழற்சிக்கு ஒரு புதிய இளம் தலைவரை உருவாக்க அவர்கள் விரும்புகிறார்கள். எனவே ரோஹித் சர்மா இனி இந்திய டெஸ்ட் அணியை வழிநடத்த மாட்டார் என பிசிசிஐக்கு தேர்வுக்குழு கூறி இருக்கிறது” என தகவல்கள் வெளியாகி உள்ளது.
இதையும் படிங்க:ஐபிஎல் தொடரில் சீக்கிரம் வெளியேறுனா.. இந்த அருமையான வாய்ப்பு இப்போ கிடைக்குது.. இதை யூஸ் பண்ணனும் – சிஎஸ்கே கேப்டன்
ரோகித் சர்மா கேப்டன் பதவியில் இருந்து ஓய்வை அறிவித்த நிலையில் இந்திய டெஸ்ட் அணிக்கு சுப்மான் கில் அடுத்த இந்திய கேப்டனாக நியமிக்கப்படலாம் என கிரிக்கெட்டாரத்தில் கூறப்படுகிறது. அவர் தற்போது ஐபிஎல் தொடரில் குஜராத் டைட்டன்ஸ் அணியை சிறப்பாக வழி நடத்தி வருவதால் அவரது அனுபவம் டெஸ்ட் அணிக்கும் சிறப்பாக இருக்கும் என தேர்வு குழு தரப்பில் நம்புவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இருப்பினும் அந்த அணியில் மற்ற அனுபவ வீரர்களான ரிஷப் பண்ட் மற்றும் கேஎல் ராகுல் ஆகியோரும் இருப்பதால் யார் கேப்டனாக போகிறார்கள் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்






