பிரெவிஸ் அவுட்டில் ஜடேஜா இதை உடனே செஞ்சிருக்கணும்.. தப்பு அவர் மேலயும் இருக்கு.. இந்திய முன்னாள் வீரர்

0
62

நேற்று நடைபெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முக்கியமான நேரத்தில் விக்கெடுகளை இழந்ததால் 2 ரன் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

இந்த சூழ்நிலையில் சிஎஸ்கே தோல்வி அடைந்த விதம் குறித்து இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் மனோஜ் திவாரி சில முக்கிய விஷயங்கள் பேசி இருக்கிறார்.

- Advertisement -

2 ரன்னில் சிஎஸ்கே தோல்வி

பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பெங்களூர் அணி 20 ஓவர்கள் முடிவில் சூப்பர் கிங்ஸ் அணியின் பந்துவீச்சை அதிரடியாக எதிர் கொண்டு விளையாடி 5 விக்கெட் இழப்புக்கு 211 ரன்கள் குவித்தது. இதில் பெங்களூர் அணியில் அதிகபட்சமாக விராட் கோலி 33 பந்துகளில் 66 ரன்கள் குவித்தார்.

அதற்குப் பிறகு வெற்றி இலக்கை நோக்கி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி களம் இறங்கிய நிலையில் தொடக்க ஆட்டக்காரர் ஆயுஷ் மாத்ரெ அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி 48 பந்துகளில் 94 ரன்கள் குவித்தார். அவரது அதிரடியான ஆட்டத்தின் மூலமாக சிஎஸ்கே அணிக்கு இறுதி கட்டத்தில் 22 பந்துகளில் 42 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டது. இந்த சூழ்நிலையில் அப்போது ஜடேஜா ஏற்கனவே விளையாடிக் கொண்டிருக்க, புதியதாக களம் இறங்கிய பிரெவிஸ் இங்கிடி வீசிய முதல் பந்தை எதிர் கொள்ள முயற்சித்த போது எல்பிடபிள்யூ முறையில் வெளியேறினார். ஆனால் ப்ரெவிஸ் அதனை எதிர்த்து காலதாமதமாக ரிவ்யூ செய்ததால் அது கணக்கில் எடுத்துக் கொள்ளப்படாமல் வெளியேற்றப்பட்டார்.

- Advertisement -

ஜடேஜா மீதும் தவறு உள்ளது

அதற்குப் பின்னர் அது டிவி ரிப்ளையில் பார்க்கப்பட்ட பிறகு அது நாட் அவுட் என்று தெரிய வந்துள்ளது. அதற்குப் பிறகு சிஎஸ்கே இரண்டு ரன் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது தற்போது பெரிய பேசுபொருளாக மாறி இருக்கிறது. இந்த சூழ்நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரர் மனோஜ் திவாரி ஏற்கனவே செட்டில் ஆன பேட்ஸ்மேன் ஜடேஜா பிரெவிசை உடனடியாக ரிவ்யூ எடுக்க வைத்திருக்க வேண்டும் என சில முக்கிய கருத்துக்கள் கூறியிருக்கிறார்.

இதையும் படிங்க:நேத்து போட்டி முடிஞ்சதும் தோனி பாய் இப்படித்தான் என்னை கூப்பிட்டார்.. அது ஏன்னு தெரியல – ஆயுஸ் மத்ரே பேட்டி

இதுகுறித்து அவர் விரிவாக கூறும்போது “அந்தப் போட்டியில் ஜடேஜா கூட தவறு செய்தார். ஒரு மூத்த வீரராக அவரே கூட நடுவரிடம் இது குறித்து பேசி இருக்கலாம். ஆனால் ப்ரெவிஸ் மட்டுமே ஏன் அந்த சமயத்தில் ரிவ்யூ எடுக்கவில்லை என்பதை நமக்கு சொல்ல முடியும். எனவே இதை பொருத்தவரை இவ்வளவு தாமதமாக எடுத்தது முற்றிலும் அவருடைய தவறு தான், இதில் நடுவரின் தவறு என்று கிடையாது. அவர் முதலில் சிங்கிள் எடுக்க ஓடினார். அதற்குப் பின்னர் இரண்டாவது ரன் எடுக்க ஓடினார் அப்போது டைமர் திரையில் காட்டப்படுகிறது. அப்போது கூட உங்களுக்கு விஷயம் தெரியாதா? என கேள்வி எழுப்பி இருக்கிறார்.

- Advertisement -