இன்று ஐபிஎல் தொடரில் பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் சிஎஸ்கே அணிக்கு எதிரான போட்டியில் ஆர்சிபி வீரர் ரொமாரியோ ஷெப்பர்ட் 14 பந்தில் ஆட்டம் இழக்காமல் 53 ரன்கள் அடித்து அணியின் வெற்றிக்கு காரணமாக இருந்து ஆட்டநாயகன் விருது வென்றார்.
இந்த போட்டியில் என்றால் புள்ளி பட்டியலில் முதலிடத்தில் முன்னேற முடியும் என்ற சூழ்நிலையில் ஆர்சிபி அணி இருந்தது. அதே சமயத்தில் ஆர்சிபி அணியை பதிலடியாக வெல்ல வேண்டிய கட்டாயத்தில் சிஎஸ்கே அணி இருந்தது. மழை அறிவிப்பு இருந்த காரணத்தினால் போட்டி குறித்து நிறைய எதிர்பார்ப்புகள் நிலவியது.
ஆட்டத்தை திருப்பியே ஷெப்பர்ட்
இந்த போட்டியில் ஆர்சிபி அணிக்கு அதிரடியான தொடக்கம் கிடைத்த போதிலும் கூட மிடில் ஓவர்களில் சிறப்பான முறையில் சிஎஸ்கே அணி திரும்பி வந்து ஆர்சிபி அணியை 180 ரன்னில் கட்டுப்படுத்தும் அளவுக்கு இருந்தது. இப்படியான நிலையில் உள்ளே வந்த ரொமாரியோ ஷெப்பர்ட் வெறும் 14 பந்தில் ஆட்டம் இழக்காமல் 53 ரன்கள் குவித்து போட்டியை மாற்றிவிட்டார்.
இந்த நிலையில் 214 ரன்கள் இலக்கை நோக்கி விளையாடிய சிஎஸ்கே அணி இறுதியாக போராடி இரண்டு ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இன்று இவருடைய அதிரடியான ஆட்டம் அமையாமல் இருந்திருந்தால் ஆர்சிபி அணி நிச்சயம் தோல்வியடைந்திருக்கும். எனவே இந்த போட்டியில் ஆட்டநாயகன் விருது இவருக்கு கொடுக்கப்பட்டது.
டிகே கொடுத்த வேலை
இந்த போட்டிகள் ஆட்டநாயகன் விருது பெற்ற ரொமரியோ ஷெப்பர்ட் பேசும் பொழுது ” இன்று எனக்கு வாய்ப்பு கிடைத்தது. நான் நீண்ட நேரம் பார்த்துக் கொண்டிருந்தேன். பிறகு பேட்டிங் செய்ய வெளியே சென்றேன். என் அணிக்காக ஏதாவது செய்ய வேண்டும் என்று விரும்பினேன். நான் நல்ல அடித்தளத்தை கொண்டு நிற்பேன், பேட்டை வேகமாக சுழற்றுவேன். இதிலிருந்து எனக்கு சக்தி கிடைக்கிறது. நான் உள்ளே சென்ற பொழுது டிம் டேவிட் என்னுடைய ஷேப்பை இழந்து விடாமல் பந்தை பார்த்து அடிக்கும்படி கூறினார்”
இதையும் படிங்க : பிரிவிஸ்-ஜடேஜா செய்த பெரிய தப்பு.. அம்பயர் அப்பீலை ஏற்காத உண்மை காரணம் இதுதான்.. இப்படி செய்யலாமா?
“கடந்த ஒரு சில போட்டிகளில் எங்கள் பேட்டிங் யூனியன் சிறப்பாக அமையவில்லை. அப்போது எங்கள் எல்லோரையும் அழைத்து டிகே ஒரு வேலை கொடுத்தார். அது இப்பொழுது பலனளிக்க ஆரம்பித்து இருக்கிறது. நான் ஒவ்வொரு பந்தாக எடுத்துக்கொண்டு பவுண்டரி மற்றும் சிக்ஸர் அடிக்க நினைத்தேன். மேலும் நான் பேட்டிங் மற்றும் பந்துவீச்சு இரண்டிலும் சமமாக பங்களிப்பு செய்ய விரும்புகிறேன். ஆனால் எனக்கு பந்துவீச்சு சரியாக செல்லவில்லை. இருந்தபோதிலும் நாங்கள் இன்று வெற்றி பெற்று விட்டோம்” என்று கூறி இருக்கிறார்.






