வைபவ் சூரியவன்சி சச்சினை விட சிறந்தவர்.. ஏன்னா பின்னணியில் இந்த காரணம் இருக்கு – நாசர் ஹுசைன் பேட்டி

0
45
Hussain

இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் நாசர் ஹுசைன் சச்சின் டெண்டுல்கரை விட வைபவ் சூரியவம்சி சிறந்தவராக தெரிகிறார் என கூறியிருக்கிறார். நடப்பு ஐபிஎல் தொடரில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக 35 பந்தில் சதம் அடித்ததில் மூலம் வைபவ் சூரியவன்சி உலகெங்கும் தெரிய ஆரம்பித்திருக்கிறார்.

இதைத் தொடர்ந்து வைபவ் சூரியவன்சிக்கு இனி இந்த பவுலர்களும் கருணை காட்ட மாட்டார்கள், பல்வேறு டெலிவரிகளை எடுத்துக் கொண்டு வருவார்கள் என ரவி சாஸ்திரி எச்சரிக்கை செய்திருக்கிறார். முதல் பந்திலேயே சிக்ஸர் அடிக்க நினைக்கும் பையனுக்கு யாரும் பரிதாபம் பார்க்க மாட்டார்கள் என அவருக்கு ஒரு இருந்தார்.

- Advertisement -

16 வயதில் சச்சின் டெண்டுல்கர்

உலக கிரிக்கெட்டில் தனது 16 வது வயதில் இந்திய அணிக்காக சச்சின் சர்வதேச போட்டிகளில் களம் இறங்கினார். மேலும் அவர் உடனுக்குடனே டெஸ்ட் போட்டியில் சதத்தை அடித்து தன்னுடைய திறமையை இந்த உலகிற்கு நிரூபித்தார். அங்கிருந்து அவர் 22 ஆவது வயதை எட்டி இருக்கும் போதே உலகின் சிறந்த பேட்ஸ்மேன் என்கின்ற அந்தஸ்தையும் பெற்றுவிட்டார்.

இந்த நிலையில் வைபவ் சூரியவன்சி 14வது வயதில் தரத்தில் மிகப்பெரிய நிலையில் இருக்கும் டி20 தொடரான ஐபிஎல் தொடரில் உலகத் தரமான பந்துவீச்சாளர்களை எதிர்த்து வெறும் 35 பந்தில் சதம் அடித்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தி இருக்கிறார். தற்போது இங்கிலாந்து முன்னாள் கேப்டன் நாசர் ஹூசைன் இருவரையும் ஒப்பீடு செய்து பேசியிருக்கிறார்.

- Advertisement -

சச்சினை விட சிறந்தவர்

இதுகுறித்து நாசர் ஹுசைன் கூறும்பொழுது ” இது முற்றிலும் நம்ப முடியாததாக இருந்தது. இந்தியாவில் இப்படி இதுபோன்ற விஷயங்கள் நடக்கின்றன. நாம் இதிலிருந்து சச்சினை திரும்பி பார்க்கிறோம். ஆனால் இது சச்சினையும் மிஞ்சும் ஒன்றாக இருக்கிறது. 14 வயதில் யாராலும் இதை நம்ப முடியவில்லை. அனைவருமே இந்த வயதில் நான் என்ன செய்து கொண்டிருந்தேன் என்று தான் பேசுகிறார்கள். நான் அண்டர் 15 கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தேன். ஆனால் இவர் உலகத்தில் சிறந்த பந்துவீச்சாளர்களுக்கு எதிராக அதிரடியாக சதம் அடித்திருக்கிறார்”

இதையும் படிங்க : 2026 டி20 WCல் சூரியவன்சி ஏன் ஆட முடியாது?.. தடுக்கும் ஐசிசி விதி ஆனா ஒருவழி இருக்கு – முழு விபரங்கள்

“இது இந்திய கிரிக்கெட்டின் கதை. இவர்களின் பலம் மிகவும் ஆழமாக இருக்கிறது. இந்தியாவிலிருந்து பல இளம் திறமையாளர்கள் உருவாக்கிக் கொண்டு வருகிறார்கள். ஆனால் தற்போது இன்னும் முன்னேறி பெரிதாக வளராத மாநிலங்களில் இருந்தும் பெரிய திறமைகள் வர ஆரம்பித்திருக்கிறது. சூரியவன்சிக்கு சிறந்த எதிர்காலம் இருக்கிறது” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -