ஐபிஎல் வரலாற்றில் எந்த முறையும் இல்லாத அளவுக்கு மிகச்சிறந்த கேப்டனான தோனியின் முடிவுகளை சொந்த அணியின் ரசிகர்களே கடுமையான முறையில் விமர்சனம் செய்து வருகிறார்கள்.
தற்போது சிஎஸ்கே அணி 10 போட்டிகளில் விளையாடி 8 தோல்விகளை சந்தித்து வெறும் 4 புள்ளிகள் உடன் புள்ளி பட்டியலில் 10வது இடத்தில் இருக்கிறது. ஐபிஎல் வரலாற்றில் இதுவரையில் சிஎஸ்கே அணி புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் முடித்தது கிடையாது. ஆனால் முதல் முறையாக அது நடந்து விடுமோ என ரசிகர்கள் பயந்து வருகிறார்கள்.
வாய்ப்பை கோட்டைவிட்ட தோனி
சிஎஸ்கே அணி கடந்த போட்டியின் தோல்வி மூலமாக ஏறக்குறைய ப்ளே ஆஃப் வாய்ப்பில் இருந்து வெளியேறிவிட்டது. எனவே பெரிய அளவில் வெற்றிகளை எதிர்பார்க்காமல், மோசமாக விளையாடும் வீரர்களை வெளியேற்றி அவர்களுடைய இடத்திற்கு இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டிய அவசியம் இருந்தது. ஏனென்றால் நேரடியாக போட்டியில் வாய்ப்பு கொடுக்கும்பொழுது அவர்களுடைய திறமையை எளிதாக தெரிந்து கொள்ளலாம்.
இந்த நிலையில் இந்த குறிப்பிட்ட போட்டியில் தீபக் ஹூடா இடத்திற்கு வன்ஸ் பேடி கொண்டுவரப்படுவார் என ரசிகர்கள் பெரிய அளவில் காத்திருந்தார்கள். இவர் நடந்து முடிந்த டெல்லி பிரிமியர் லீக்கில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக விளையாடும் பிரியன்ஸ் ஆர்யாவை விட அதிக சிக்ஸர்கள் அடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இவர் விக்கெட் கீப்பர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
தோனியின் மிகத் தவறான முடிவு
இந்த நிலையில் மீண்டும் தோனி தீபக் ஹூடாவுக்கு வாய்ப்பு கொடுத்து வன்ஸ் பேடியை மீண்டும் பெஞ்சில் அமர வைத்தார். சிஎஸ்கே ஓரளவுக்கு போட்டியில் ரன்கள் குவிக்க ஆரம்பிக்க ரசிகர்கள் இதை மறந்தார்கள். ஆனால் கடைசியில் உள்ளே வந்த தீபக் ஹூடா தேவையில்லாமல் இரண்டு ரன் எடுத்து, சாகல் ஹாட்ரிக் எடுக்கவும் முக்கிய காரணமாக இருந்தார். மேலும் சிஎஸ்கே அணி 20 ரன் குறைவாக எடுக்கவும் முக்கிய காரணமாக இருந்தார். இதை சிஎஸ்கே ரசிகர்களை கடுமையாக கோபம் அடைய வைத்திருக்கிறது.
இதையும் படிங்க : 60 ஓவர்கள்.. இரண்டே பீல்டர்கள்.. சிஎஸ்கே பேட்ஸ்மேன்களின் படுமோசமான சம்பவம்.. இப்படி கூடவா நடக்கும்?
பொதுவாக சிறப்பான முடிவுகளை எடுப்பதில் தோனி வல்லவர். அப்படிப்பட்டவர் இந்த ஐபிஎல் தொடரில் பந்துவீச்சாளர்களை பயன்படுத்துவது, அணிக்கு சரியான வீரர்களை தேர்வு செய்வதில் பெரிய அளவில் சொதப்பி வருவது ரசிகர்களை கோபமும் ஆச்சரியமும் அடைய வைத்திருக்கிறது. எனவே நீங்களே இப்படி செய்யலாமா என அவர்கள் தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருகிறார்கள். இதில் ஒரு சிலர் “விக்கெட் கீப்பிங் பேட்ஸ்மேன் வன்ஸ் பேடிக்கு வாய்ப்பு கொடுத்தால் உங்களுக்கு வாய்ப்பு இல்லாமல் போய்விடும் என பயப்படுகிறீர்களா?” எனவும் விமர்சிக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது!






