இந்த ஆண்டு டெல்லி அணிக்கு வாங்கப்பட்ட தமிழகத்தைச் சேர்ந்த இடதுகை வேகப்பந்து வீச்சாளர் நடராஜனை இதுவரையில் விளையாட வைக்காத காரணம் குறித்து டெல்லி அணியின் மெண்டல் கெவின் பீட்டர்சன் பேட்டி அளித்திருக்கிறார். அவர் கூறிய காரணம் ரசிகர்களை கோபம் அடைய வைத்திருக்கிறது.
தமிழகத்தைச் சேர்ந்த நடராஜன் இதுவரையில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக தொடர்ந்து விளையாடி வந்தார். இந்த நிலையில் இந்த ஆண்டு ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலத்தில் டெல்லி நடராஜனை 10.75 கோடி ரூபாய் கொடுத்து ஏலத்தில் வாங்கியது. இதுவரையில் அவர் காயத்தில் இருக்கிறார் எனவே விளையாடவில்லை என அனைவரும் கருதி வந்தது குறிப்பிடத்தக்கது.
டெல்லி அணியின் ஃபாஸ்ட் பௌலிங் யூனிட்
தற்போது டெல்லி அணியில் வேகப்பந்து வீச்சாளர்களாக மிட்சல் ஸ்டார்க், முகேஷ் குமார், துஸ்மந்திர சமீரா, மோகித் சர்மா ஆகியோர் செயல்பட்டு வருகிறார்கள். அதே சமயத்தில் நடராஜன் காயம் காரணமாக தொடர்ந்து விளையாடாமல் இருந்து வருகிறார் என்று கூறப்பட்டு வந்தது. எனவே காயம் சரியானதும் அவருக்கு முதல் வாய்ப்பு கொடுக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்பட்டது.
இந்த நிலையில் டெல்லி அணி நேற்று தங்களது சொந்த மைதானத்தில் ஆர்சிபி அணிக்கு எதிரான போட்டியில் தோல்வி அடைந்தது. இந்த போட்டியின் முடிவுக்கு பிறகு பத்திரிகையாளர்களை சந்தித்த டெல்லி அணியின் மெண்டர் கெவின் பீட்டர்சன் நடராஜன் விளையாடாதது குறித்தான காரணத்தை கூறினார். தற்போது அவர் கூறியிருக்கும் காரணம் ரசிகர்களை கோபப்பட வைத்திருக்கிறது.
நடராஜன் விளையாடாத காரணம் என்ன?
நேற்று பத்திரிக்கையாளர் சந்திப்பில் நடராஜன் விளையாடாத காரணம் குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு பதில் அளித்த கெவின் பீட்டர்சன் ” தற்போது நாங்கள் 12 வீரர்களை மட்டுமே வைத்து விளையாட வேண்டி இருக்கிறது. இந்த நிலையில் தற்போது நடராஜனை அணியில் எந்த இடத்தில் சேர்ப்பது என்று நீங்கள் சொன்னீர்கள் என்றால், அது எங்களுக்கு பெரிய உதவியாக இருக்கும். அவரை எங்கு விளையாட வைப்பது என்று எங்களுக்கு தெரியவில்லை”
இதையும் படிங்க : டெல்லி என் ஊரு.. கேஎல் ராகுலுக்கு விராட் கோலி ஸ்வீட் ரிவென்ஞ்.. யாருக்கும் தெரியாம நடந்த சம்பவம்
“மேலும் பெரிய தொகைக்கு வாங்கப்பட்டு வெளியில் அமர வைக்கப்பட்டு இருக்கிறார் என்கின்ற பேச்சில் எனக்கு உடன்பாடு இல்லை. ஏனென்றால் இங்கிலீஷ் பிரிமியர் லீக்கில் நிறைய வீரர்கள் பெரிய தொகைக்கு வாங்கப்பட்டு இப்படி இருக்கிறார்கள். எனவே இந்த வாதம் தேவையற்றது” என்று கூறி இருக்கிறார். முகேஷ் குமார் இடத்தில் தாராளமாக விளையாட வைக்க முடிந்தும் அவரை விளையாட வைக்காதது ரசிகர்களை கோபம் அடைய வைத்திருக்கிறது.






