இந்த 4 பசங்க இந்திய கிரிக்கெட்டில் பெரிய ஆளா வருவாங்க.. குறிப்பா அவரு எங்கள மூச்சு வாங்க வச்சிட்டாரு – ரவி சாஸ்திரி

0
492

ஐபிஎல் 2005 கிரிக்கெட்டில் தொடர் தற்போது நடைபெற்று வரும் நிலையில் இளம் வீரர்கள் அசத்தலான பங்களிப்பை வெளிப்படுத்தி வருகிறார்கள்.

இதில் இந்திய அணியில் இடம் பெறுவதற்கு வாய்ப்பு இருக்கக்கூடிய நான்கு இளம் வீரர்களை இந்திய முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தேர்வு செய்து இருக்கிறார்.

- Advertisement -

திறமையான நான்கு இளம் வீரர்கள்

நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடரை பொருத்தவரை தற்போது முதல் சுற்று ஆட்டங்கள் முடிந்து இரண்டாவது சுற்று ஆட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இதில் குஜராத், டெல்லி, மும்பை மற்றும் பெங்களூர் என நான்கு அணிகள் முதல் நான்கு இடங்களில் இருப்பது குறிப்பிடத்தக்கது. இதில் ஐந்து முறை சாம்பியன் பட்டத்தை வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இந்த ஆண்டு மோசமான பங்களிப்பை வெளிப்படுத்தி தற்போது 10வது இடத்தில் இருக்கிறது.

நிலைமை எப்படி இருந்தாலும் ஒவ்வொரு அணியும் இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கொடுத்து, அவர்களை உலகிற்கு அறிமுகப்படுத்துவதோடு மட்டுமல்லாமல் இந்திய அணிக்கும் வாய்ப்பு பெற வைப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறார்கள். அதிலும் குறிப்பாக ராஜஸ்தான் அணிக்கு கடந்த சில போட்டிகளாக விளையாடி வரும் 14 வயது வீரர் வைபவ் சூர்யவன்சி சிறிதும் பயமின்றி அதிரடியான விளையாட்டை விளையாடி வருகிறார். இந்த சூழ்நிலையில் இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி நான்கு இளம் வீரர்களை தேர்வு செய்துள்ளார்.

- Advertisement -

இந்திய அணியில் வாய்ப்பு

இதுகுறித்து அவர் கூறும் போது “முதலில் நான் பஞ்சாப் அணியின் துவக்க ஆட்டக்காரர்களாக விளையாடி வரும் பிரப்சிமரன் சிங் மற்றும் பிரியன்ஸ் ஆர்யா ஆகியோரை தேர்வு செய்கிறேன். அவர்கள் இருவருமே சிறப்பாக விளையாடி வருகிறார்கள். மும்பை மைதானத்தில் சிஎஸ்கே ஆயுஸ் மாத்ரே விளையாடிய மூன்று ஷார்ட்கள் வியக்க வைக்கிறது. நட்சத்திர மும்பை அணிக்கு எதிராக 17 வயது சிறுவன் தேர்வு செய்து விளையாடிய ஷாட்கள் அனைவரது கவனத்தையும் ஈர்த்தது.

இதையும் படிங்க:2025 ஐபிஎல் சிறந்த பேட்டர் இவங்கதான்.. கோலி கிடையாது.. ரன் எடுத்தா மட்டும் போதுமா? – மஞ்ச்ரேக்கர் வெளியிட்ட லிஸ்ட்

ஆயுஷ் மாத்ரேவுக்கு ஒரு நீண்ட எதிர்காலம் இருப்பதாக நினைக்கிறேன். சரியான நபர்களால் கையாளப்பட்டு சரியான நபர்களோடு இருந்தால் அவர் நீண்ட காலம் பயணிப்பார். அதேபோல ராஜஸ்தான் துவக்க வீரர் வைபவ் முதல் போட்டியில் அடித்த முதல் சிக்ஸ் அனைவரையும் மூச்சு வாங்க வைத்திருக்கும் என்று நினைக்கிறேன். அவர் மிகவும் இளமையாக இருக்கிறார். எனவே அவரையும் கொஞ்சம் விளையாட விடுங்கள் என்று நான் கூறுவேன். ஏனென்றால் அந்த வயதில் தோல்வியும் இருக்கும் எனவே அந்த வயதில் அவர் தோல்வியை எப்படி கையாளுகிறார் என்பதை பொறுத்து மற்ற விஷயங்கள் அமையும்”என்று அவர் பேசியிருக்கிறார்.

- Advertisement -