தோனியின் டி20 வாழ்க்கையில் நடந்த வினோத சோகம்.. எதிரணி ரசிகர்களும் பரிதாபம்.. இப்படியும் நடக்குமா?

0
91
Dhoni

நேற்று சிஎஸ்கே அணி தங்களது சொந்த மைதானத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிராக ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தார்கள். இந்த நிலையில் சிஎஸ்கே கேப்டன் மகேந்திர சிங் தோனியின் டி20 வாழ்க்கையில் ஆச்சரியப்படும் வகையில் வினோத சம்பவம் நடந்திருக்கிறது.

சிஎஸ்கே அணி ஏற்கனவே முதல் முறையாக தங்களது சொந்த மைதானத்தில் 3 போட்டிகளை தொடர்ந்து தோற்று இருந்தது. மேலும் முதல் முறையாக தொடர்ந்து 5 போட்டிகளையும் தோற்று இருந்தது. இந்த நிலையில் சிஎஸ்கே அணி இன்று ஹைதராபாத் அணிக்கு எதிராக தோல்வி அடைந்ததின் மூலம் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தொடர்ச்சியாக நான்காவது தோல்வியை சந்தித்திருக்கிறது.

- Advertisement -

தோனியின் சிறப்பு போட்டி

இந்த குறிப்பிட்ட போட்டி தோனிக்கு ஒட்டு மொத்தமாக 400வது டி20 போட்டியாகும். அதாவது சர்வதேச மற்றும் ஐபிஎல் தொடர் என சேர்த்து 400வது டெஸ்ட் போட்டி ஆகும். இந்திய வீரர்களில் 400வது டி20 போட்டியை விளையாடும் நான்காவது வீரர் என்ற சிறப்பை மகேந்திர சிங் தோனி பெற்றார்.

இப்படியான சிறப்பு வாய்ந்த போட்டியில் அதுவும் சொந்த மைதானத்தில் சிஎஸ்கே அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியிடம் தோல்வி அடைந்தது. இந்த முறை பேட்டிங்கில் 180 ரன்கள் எடுக்கக்கூடிய இடத்தில் ஒரு கட்டத்தில் இருந்து அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து 154 ரன்கள் மட்டுமே எடுத்தது. மீண்டும் ஒருமுறை பேட்டிங்கால் தோல்வி அடைந்திருக்கிறது.

- Advertisement -

தோனிக்கு நடந்த வினோதம்

இந்த நிலையில் தோனிக்கு இன்றைய போட்டியில் ஏற்பட்ட தோல்வி மூலமாக ஒரு வினோதமான சம்பவம் அவரது டி20 கிரிக்கெட் வாழ்க்கையில் நடந்திருக்கிறது. இன்று 400வது டி20 போட்டியில் தோனி விளையாடிய பொழுது அவர் விளையாடிய அணி தோல்வி அடைந்திருக்கிறது. இது போலவே மேலும் மிக முக்கியமான மூன்று முறையும் இதே போல நடந்திருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

இதையும் படிங்க : சிஎஸ்கே 10வது இடத்தில் இருப்பது நல்லது.. 5 முறை சாம்பியன்ஸ் இந்த கஷ்டத்தை அதுக்காக அனுபவிக்கனும் – முன்னாள் ஜாம்பவான்கள் கருத்து

தோனிக்கு டி20 வாழ்க்கையில் 100வது, 200வது மற்றும் 300வது 400 ஆவது என நான்கு முக்கியமான போட்டிகளிலும் தோல்வியே வந்திருப்பது எல்லோரையும் ஆச்சரியப்பட வைத்திருக்கிறது. குறிப்பாக டி20 கிரிக்கெட்டில் மிகச்சிறந்த கேப்டனான மகேந்திர சிங் தோனிக்கு இப்படி முக்கியமான நான்கு போட்டிகளில் தோல்வி வந்திருக்கக் கூடிய வினோதத்தை பார்த்து ரசிகர்கள் ஆச்சரியப்படுகிறார்கள்!

- Advertisement -