நேற்று நடைபெற்ற லக்னோ சூப்பர் ஜெயின்ஸ் மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டியில் டெல்லி அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் இரண்டாவது இடத்திற்கு முன்னேறி உள்ளது.
இந்த சூழ்நிலையில் நேற்றைய போட்டியில் லக்னோ அணியின் கேப்டன் அர்ஷப் பண்ட் பேட்டிங் செய்த விதம் குறித்து இந்திய டெஸ்ட் வீரர் சேட்டேஸ்வர் புஜாரா சில முக்கிய விஷயங்கள் பேசி இருக்கிறார்.
லக்னோ அணி தோல்வி
லக்னோவில் நடைபெற்ற போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் லக்னோ அணியை பேட்டிங் செய்ய அழைக்க, முதலில் பேட்டிங் செய்த லக்னோ அணி 20 ஓவர்கள் முடிவில் ஆறு விக்கெட் இழப்புக்கு 159 ரன்கள் குவித்தது. தொடக்கம் அந்த அணிக்கு நன்றாக அமைந்தாலும் அதற்குப் பிறகு மிடில் வரிசையில் வரவேண்டிய ரிஷப் பண்ட் நேற்றைய போட்டியில் 7வது இடத்தில் களம் இறங்கினார். மேலும் பினிஷர் ரோலில் களமிறங்கிய அப்துல் ஜமாத் மிடில் வரிசையில் களம் இறங்கி 8 பந்துகளை வீணடித்து வெறும் ரெண்டு ரன் மட்டுமே எடுத்த நிலையில் வெளியேறினார்.
இதனால் 200க்கும் அதிகமான ரன்கள் குவித்திருக்க வேண்டிய இடத்தில் லக்னோ அணி வெறும் 159 ரன்கள் மட்டுமே எடுத்தது. மேலும் 7வது வரிசையில் களமிறங்கிய ரிஷப் பண்ட் வெறும் இரண்டு பந்துகளை மட்டுமே எதிர்கொண்டு 0 ரன்னில் போல்ட் ஆகி வெளியேறி இருப்பது பல்வேறு விமர்சனங்களை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த சூழ்நிலையில் புஜாரா ரிஷப் பண்ட் எம் எஸ் தோனி போல செய்ய முயற்சிக்கக் கூடாது என்று சில விஷயங்கள் பேசி இருக்கிறார்.
ரிஷப் பண்ட் எம்எஸ் தோனி கிடையாது
இது குறித்து அவர் விரிவாக கூறும்போது ” ரிஷப் பண்ட் உண்மையில் என்ன நினைத்து ஏழாவது வரிசையில் களமிறங்கி விளையாடினார் என்று தெரியவில்லை. அவர் மிடில் வரிசையில் களமிறங்கி விளையாட வேண்டும் என்பதில் எந்தவிதமான சந்தேகமும் இல்லை. அவர் எம் எஸ் தோனி செய்ய நினைத்ததை செய்ய நினைக்கிறார், ஆனால் இவரால் தோனியின் அருகில் கூட வர முடியாது. 6வது மற்றும் 15ஆவது ஓவர்களுக்கு இடையில் மிடில் வரிசையில் பேட்டிங் செய்யக்கூடிய வீரர்களில் அவர் ஒருவர் என்று நான் இன்னும் நினைக்கிறேன்.
இதையும் படிங்க:மயாங்க் ரெடி ஆயிட்டார்னு.. அவருக்காக இந்த ரிஸ்க் எடுக்க போய் நாங்க சிக்கல்ல மாட்டிக்கிட்டடோம் – லக்னோ அணியின் கேப்டன் ரிஷப் பண்ட்
அவர் பினிஷர் கிடையாது, எனவே ரிஷப் பண்ட் மிடில் வரிசையில் இறங்கி பேட்டிங் செய்வதே சரியானது. இந்த விஷயம் வினோதமாக இருப்பதால் நான் இதனை சொல்கிறேன். இதனைப் பார்க்கும்போது பதோனி நான்கு அல்லது ஐந்தாவது இடத்தில் பேட்டிங் செய்வதில் எந்த விதமான பிரச்சினையும் இல்லை. அவர் நன்றாக விளையாடுகிறார் இதை என்னால் பார்க்க முடிகிறது. நேர்மையாகச் சொல்ல வேண்டும் என்றால் அவர் பண்டை விட ரன்கள் எடுக்க வாய்ப்புள்ளது” என்று பேசி இருக்கிறார்.






