ஐபிஎல் 2025.. சிஎஸ்கே கதை முடிந்தது.. எஞ்சி இருக்கும் போட்டிக்கு இதையாவது செய்யுங்க.. ஸ்ரீகாந்த் கருத்து

0
14

ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சாம்பியன் பட்டத்தை வென்று தோனியை வழியனுப்பும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் யாருமே நினைக்காத வகையில் சிஎஸ்கே அணி எட்டு போட்டிகளில் ஆறு போட்டிகளில் தோல்வியை தழுவி தற்போது புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் இருக்கிறது.

இதனால் சிஎஸ்கே அணி எஞ்சியிருக்கும் ஆறு போட்டிகளிலும் வெற்றி பெற்றால் மட்டுமே அடுத்த சுற்றுக்கு செல்ல முடியும் என்ற இக்கட்டான நிலை ஏற்பட்டு இருக்கிறது. இதனால் சிஎஸ்கே வின் கதை கிட்டத்தட்ட முடிவுக்கு வந்துவிட்டது என முன்னாள் கிரிக்கெட் வீரர் ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார்.

- Advertisement -

சிஎஸ்கேவுக்கு முடிந்துவிட்டது:

இது குறித்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ள அவர், மும்பை இந்தியன்ஸ் அணி இன்று பிரமாதமாக விளையாடினார்கள். ரோகித் சர்மாவும் சூரிய குமாரும் இணைந்து பந்துகளை மைதானத்தின் அனைத்து பக்கமும் சேர்கள் அடித்து அசத்தினார்கள்.

தற்போது சிஎஸ்கே அணிக்கு இந்த சீசன் கிட்டத்தட்ட முடிவுக்கு வந்துவிட்டது. தற்போது சிஎஸ்கேவுக்கு நான் ஒரே ஒரு அறிவுரை தான் கூறுவேன். எஞ்சிருக்கும் போட்டிகள் இல்லாதது உங்களுடைய இயல்பான ஆட்டத்தை விளையாடுங்கள். களத்திற்கு சென்று உங்களுடைய சுபாவத்தை வெளிப்படுத்துங்கள்.

- Advertisement -

தோனி தான் மேஜிக் செய்யனும்:

இனி மும்பை அணியை நினைத்தால் தான் இந்த கோப்பையை அவர்கள் இழப்பார்கள் என்று ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார். இதைப் போன்று மும்பை அணிக்கு எதிராக சிஎஸ்கே அணி 20 ரன்கள் குறைவாக அடித்து விட்டதாக கணித்திருந்த ஸ்ரீகாந்த், பவர் பிளேவில் மிகவும் எச்சரிக்கையுடன் விளையாடுகிறேன் என்ற பெயரில் சிஎஸ்கே ரன்களை அடிக்க வில்லை என்று  குறை கூறியுள்ளார்.

இதையும் படிங்க: நான் ஓபனா சொல்றேன்.. சிஎஸ்கே அணியின் இந்த நிலைமைக்கு இவங்க ரெண்டு பேர்தான் காரணம் – சுரேஷ் ரெய்னா அதிரடி பேச்சு

இதேபோன்று பும்ரா அபாரமாக பந்து வீசினார் என்றும் இந்த நிலையிலிருந்து சிஎஸ்கே அணி வெற்றி பெற வேண்டும் என்றால் தோனி தான் ஏதேனும் மேஜிக் செய்ய வேண்டும் என்று ஸ்ரீகாந்த் கூறியுள்ளார். இது தோல்வி குறித்து பேசி இருந்த தோனியும், இனி அடுத்த சீசனுக்கான அணியை கட்டமைப்பதில் கவனம் செலுத்த வேண்டும் என்பது குறித்து பேசி இருந்தது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -