நேற்று ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணிக்கு எதிரான போட்டியில் மும்பை இந்தியன்ஸ் வீரர் சூரியகுமார் யாதவ் அதிரடியாக பேட்டிங் செய்து அரை சதம் அடித்து அணி வெல்வதற்கு முக்கிய காரணமாக இருந்தார். இந்த நிலையில் ரவிந்திர ஜடேஜாவின் பந்துவீச்சை குறி வைத்து அடித்தது ஏன் என்று கூறியிருக்கிறார்.
நடப்பு ஐபிஎல் தொடரில் சிறந்த அணியாக மும்பை இந்தியன்ஸ் இருந்தாலும் கூட அந்த அணி தொடர் தோல்விகளை சந்தித்து வந்தது. இந்த நிலையில் அடுத்தடுத்து இரண்டு வெற்றிகளை பெற்று 7 போட்டிகளில் மூன்று வெற்றிகள் என்ற நிலையில் இருந்தது. நிலையில் நேற்று சிஎஸ்கே அணிக்கு எதிராக வெற்றியை பதிவு செய்து எட்டு போட்டியில் நான்கு வெற்றி என ப்ளே ஆப் சுற்றிற்கான வாய்ப்பை பலப்படுத்தி இருக்கிறது.
சூரியகுமார் ருத்ர தாண்டவம்
நேற்றைய போட்டியில் முதலில் ரிக்கல்ட்டன் ஆட்டம் இழந்ததும் இடது கை வீரர் திலக் வர்மா உள்ளே வருவது சரியாக இருந்தது. ஆனால் மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகம் சூரியகுமார் யாதவை அனுப்பியது. அந்த அணி நிர்வாகத்தின் முடிவு சரியானது என்பதை சூரிய குமாரின் அதிரடி நிரூபித்தது. குறிப்பாக ரவீந்திர ஜடேஜாவை குறி வைத்து அடித்து நொறுக்கினார்.
இந்த போட்டியில் சூரியகுமார் யாதவ் ஆட்டம் இழக்காமல் வெறும் 30 பந்துகளை மட்டுமே சந்தித்து 6 பவுண்டரி மற்றும் 5 சிக்ஸர்களுடன் 68 ரன்கள் குவித்தார். இவரது அதிரடியின் காரணமாக இன்னொரு முனையில் அதிரடியாக விளையாடிய ரோஹித் சர்மாவின் ஆட்டம் வெளியே தெரியாமலே போய்விட்டது.
ஜடேஜாவை குறி வைத்தது ஏன்?
” ரோகித் சர்மா விளையாட்டின் ஜாம்பவான் வீரர். நான் உள்ளே சென்ற பொழுது ஆடுகளத்தில் கொஞ்சம் பந்து நின்று வந்தது. ஆனால் ரோஹித் சர்மா என்னுடைய இயல்பான ஆட்டத்தை விளையாடும் படி என்னிடம் கூறினார். மேலும் அவர் அதிரடியாக விளையாடியது என் மீதான அழுத்தத்தை வெகுவாக குறைத்து விட்டது. மேலும் நான் இங்கு விளையாடிதான் வளர்ந்தேன். மும்பையில் இருந்து வந்ததால் சிவப்பு மண் ஆடுகளத்தில் விளையாடிய பழக்கம் மிக அதிகம்”
இதையும் படிங்க : ரோகித்த பத்தி எங்களுக்கு கவலையே கிடையாது.. எங்களுக்கு மிஸ் ஆனது வேற ஒரு விஷயம் – ஹர்திக் பாண்டியா பேட்டி
“நீங்கள் ஜடேஜாவை நிச்சயமாக வளர விடக்கூடாது. அவரைப் போன்று திறமையும் அனுபவமும் கொண்ட ஒருவரை நீங்கள் செட்டில் ஆக விட்டால் சரியாக இருக்காது. எனவேதான் அவரது பந்துவீச்சை நான் குறி வைத்து அடித்து விளையாடினேன். இப்போது நாங்கள் புள்ளி பட்டியலில் எந்த இடத்தில் இருக்கிறோம் என்று பார்க்க கூடாது. ஒவ்வொரு போட்டியாக எடுத்துக் கொண்டு நாங்கள் செல்ல வேண்டும்” என்று கூறி இருக்கிறார்.






