ஆட்டநாயகன் விருது எனக்கு ஏன் குடுத்தாங்க.? நியாயமா இது அவருக்குதான் போய் சேரனும் – விராட் கோலி சுவாரஸ்யம்

0
382

நியூ சண்டிகரில் நடைபெற்ற ஆர்சிபி மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டியில் சிறப்பாக விளையாடிய ஆர்சிபி அணி 7 விக்கட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் பெங்களூர் அணியின் வெற்றிக்கு விராட் கோலி முக்கிய காரணமாக அமைந்தார்.

வெற்றி பெற்ற விதம் குறித்து விராட் கோலி சில முக்கிய விஷயங்களை பேசி இருக்கிறார்.

- Advertisement -

ஆர்சிபி அணி வெற்றி

நியூ சண்டிகரில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் கிங்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 157 ரன்கள் குவித்தது. ஆடுகளம் கொஞ்சம் மெதுவாக காணப்பட்டதால் அதனை பெங்களூர் அணியின் பந்துவீச்சாளர்கள் அற்புதமாக பயன்படுத்திக் கொண்டனர். அந்த அணியை பொறுத்த வரை தொடக்க ஆட்டக்காரர் பிரபு சிம்ரன் சின் 17 பந்துகளை எதிர் கொண்டு 33 ரன்கள் குவித்தார். அதற்குப் பின்னர் பஞ்சாப் அணியின் பேட்ஸ்மேன்களால் அதிரடியாக விளையாட முடியவில்லை.

அதற்குப் பிறகு வெற்றி இலக்கை நோக்கி பெங்களூர் அணி களம் இறங்கிய நிலையில் தொடக்க ஆட்டக்காரர் பில் சால்ட் 1 ரன்னில் வெளியேறினாலும், ஆடுகளத்தின் தன்மையை உணர்ந்த விராட் கோலி நங்கூரமாக நிலைத்து நின்று விளையாட ஆரம்பித்தார். அவருக்கு படிக்கல் நன்றாக ஒத்துழைக்க 61 ரன்கள் குவித்து படிக்கல் வெளியேற, 54 பந்துகளில் 7 பவுண்டரி மற்றும் 1 சிக்சர் என 73 ரன்கள் குவித்த விராட் கோலி பெங்களூர் அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தார்.

- Advertisement -

ஆட்ட நாயகன் விராட் கோலி

மேலும் ஆட்டநாயகன் விருது வென்ற விராட் கோலி இந்த போட்டி குறித்து கூறும் போது ” தகுதி அடிப்படையில் இரண்டு புள்ளிகள் மிகப்பெரிய வித்தியாசத்தை ஏற்படுத்தும். எங்கள் சொந்த மைதானத்திற்கு வெளியே நாங்கள் அற்புதமான கிரிக்கெட்டை விளையாடி உள்ளோம். நீங்கள் 8 முதல் 10 புள்ளிகள் வரை செல்லும்போது அது புள்ளிகள் பட்டியலில் பெரிய வித்தியாசத்தை ஏற்படுத்துகிறது. ஒவ்வொரு போட்டியிலும் 2 புள்ளிகள் பெற வேண்டும் என்கிற மனநிலை இருக்க வேண்டும். நான் என்னுடைய வேகத்தை அதிகரிக்க விரும்பினேன்.

இதையும் படிங்க:அவசரப்பட்டு சுத்தாம.. இந்த ரன்களை நான் தாண்டுனா.. அதற்குப் பின் என்னை நிறுத்துவது கடினம் – ஸ்ரேயாஸ் ஐயர் பேட்டி

இன்று என்னோடு விளையாடிய தேவ் அதிரடியான மாற்றத்தை ஏற்படுத்தினார். நியாயமாக இந்த விருது அவருக்கு தான் செல்ல வேண்டும் எனக்கு ஏன் வழங்கினார்கள் என்று தெரியவில்லை. நான் கடைசிவரை விளையாட விரும்புகிறேன். ஒரு முனையைப் பிடித்துக் கொண்டு அதற்குப் பின்னர் வேகத்தை அதிகரிக்கும் முயற்சி செய்கிறேன். அதே வழியில் தொடர்ந்து செல்ல வேண்டும் என்கிற ஆசை இருக்கும். டி20 கிரிக்கெட்டில் ஒரு நல்ல பார்ட்னர்ஷிப் எப்போது முக்கியம். எங்களிடம் இப்போது ஒரு அற்புதமான அணி இருக்கிறது. எங்களிடம் சிறந்த வீரர்கள் வெற்றிக்கான பசியுடன் இருக்கும் போது இதை பார்ப்பது எப்போதுமே நன்றாக இருக்கும்” என்று கோலி கூறி இருக்கிறார்

- Advertisement -