இன்று மும்பை வான்கடே மைதானத்தில் சிஎஸ்கே அணி மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் விளையாடுகிறது. இந்த போட்டியில் தோனி இரண்டு விஷயங்களை கட்டாயம் செய்ய வேண்டும் என சிஎஸ்கே ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.
தற்போது மும்பை இந்தியன்ஸ் அணி ஏழு போட்டிகளில் விளையாடி அதில் மூன்று போட்டிகளை வென்று 6 புள்ளிகள் பெற்று இருக்கிறது. அதே சமயத்தில் 7 போட்டிகளில் விளையாடியிருக்கும் சிஎஸ்கே அணி அதில் இரண்டு போட்டிகளை மட்டுமே வென்று நான்கு புள்ளிகளுடன் புள்ளி பட்டியலில் பத்தாவது இடத்தில் இருந்து வருகிறது.
இவரைக் கொண்டு வர வேண்டாம்
இன்றைய போட்டியில் அணியில் மாற்றத்தை ஏற்படுத்தும் பொழுது கூடுதலாக இந்திய வீரரை வைத்துக் கொள்வதற்காக ரவிச்சந்திரன் அஸ்வினை மீண்டும் கொண்டு வருவது சிக்கலாக முடியும் என சிஎஸ்கே ரசிகர்கள் கருதுகிறார்கள். எனவே இன்றைய போட்டியில் மீண்டும் அவரை பிளேயிங் லெவனில் தோனி சேர்க்கக் கூடாது என்று கோரிக்கை வைக்கிறார்கள்.
கடந்த போட்டியில் லக்னோவுக்கு எதிராக ரவிச்சந்திரன் அஸ்வின் விளையாடவில்லை. இந்த நிலையில் இரண்டு சுழல் பந்துவீச்சாளர்கள் மட்டுமே இருந்த காரணத்தினால் ஜடேஜாவை தோனி மூன்று ஓவரர்களுக்கு முன்கூட்டியே கொண்டு வந்து பயன்படுத்தினார். இதன் காரணமாக ஜடேஜா பந்துவீச்சு சிறப்பாகவும் அமைந்தது. அவர் இரண்டு விக்கெட்டுகளையும் கைப்பற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.
கட்டாயம் இவர் வேண்டும்
அதே சமயத்தில் சிஎஸ்கே அணியில் புதிதாக சேர்க்கப்பட்டிருக்கும் தென் ஆப்பிரிக்காவின் இளம் நட்சத்திரம் டிவால்ட் பிரிவியஸ் உடனடியாக மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் விளையாட வேண்டும் எனவும் சிஎஸ்கே ரசிகர்கள் பெரிய அளவில் கோரிக்கை வைத்து வருகிறார்கள். இவரது அதிரடியான ஆட்டம் நிச்சயம் சிஎஸ்கே அணிக்கு சிக்ஸர்களை நிறைய கொண்டு வரும் என கருதுகிறார்கள்.
இதையும் படிங்க : சிஎஸ்கேவைவிட மும்பையில்தான் அதிக கிரிக்கெட் விளையாடுறேன்.. இங்குதான் மகிழ்ச்சியா இருக்கு – மிச்சல் சான்ட்னர் பேட்டி
மேலும் ராகுல் திரிபாதியை நீக்கிவிட வேண்டும் என்றும், மேலும் விஜய் சங்கருக்கு பதிலாக வன்ஸ் பேடியை கொண்டு வர வேண்டும் என்றோம், இல்லையென்றால் விஜய் சங்கரை எட்டாவது இடத்தில் வைத்துக்கொண்டு அதற்கு முன்பாக தோனி ஏழாவது இடத்திலாவது பேட்டிங் செய்ய வந்து விட வேண்டும் என்றும் கேட்டு வருகிறார்கள். ஏதாவது செய்து புள்ளி பட்டியலில் பத்தாவது இடத்தில் இருந்து ஒரு இடமாவது மேலே வர வேண்டும் என்பது சிஎஸ்கே ரசிகர்களின் நோக்கமாக இருக்கிறது!






