SRH அதிரடி இனி எடுபடாது.. மும்பை போட்டு கொடுத்த ஸ்கெட்ச்.. சின்ன பிளான் பெரிய லாபம்.. முழு அலசல்

0
294
MI

கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் அதிரடியான பேட்டிங் யூனிட்டை அமைத்து ஹைதராபாத் அணி எல்லோரையும் மிரட்டியது. தற்போது அவர்களை எப்படி அடக்குவது என்கின்ற அருமையான திட்டத்தை மற்ற அணிகளுக்கு மும்பை இந்தியன்ஸ் வகுத்துக் கொடுத்திருக்கிறது.

நேற்று மும்பை வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நடைபெற்ற போட்டியில் ஹைதராபாத் அணியின் அதிரடி ஆட்டக்காரர்களால் எதுவுமே செய்ய முடியவில்லை. 18 மற்றும் 20வது ஓவரில் 20, 20 ரன்களுக்கு மேல் வந்த காரணத்தினால் மட்டுமே ஹைதராபாத் அணியால் 162 ரன்கள் சேர்க்க முடிந்தது. பிறகு அதை 18.1 ஓவரில் விரட்டி மும்பை இந்தியன்ஸ் வெற்றி பெற்றது.

- Advertisement -

ஹைதராபாத் அணியின் சரிவுக்கு காரணம்

நடப்பு ஐபிஎல் தொடரில் ஹைதராபாத் அணி முதல் போட்டியை தங்களது சொந்த ஹைதராபாத் ராஜீவ் காந்தி மைதானத்தில் விளையாடியது. இந்த போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக 286 ரன்கள் எடுத்தது. இதற்கு பேட்டிங் செய்ய சாதகமான ஆடுகளம் உருவாக்கப்பட்டிருந்தது.

இதைத் தொடர்ந்து அந்த அணி விளையாடிய அடுத்த நான்கு போட்டிகளுக்கும் உள்ளே மற்றும் வெளியில் கொஞ்சம் மெதுவான மற்றும் பந்து திரும்பும் படியான ஆடுகளங்கள் கொடுக்கப்பட்டன. இப்படியான ஆடுகளங்களில் அந்த அணியால் 200 ரன்னை கூட தாண்ட முடியவில்லை. இந்தத் தொடரில் 300 ரன்கள் அடிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட அந்த அணி தற்போது ஏழு போட்டிகளில் ஐந்து போட்டிகளை தோற்று இருக்கிறது.

- Advertisement -

மும்பை கொடுத்த ஸ்கெட்ச்

நேற்று மும்பை வான்கடே மைதானத்தில் வழக்கத்திற்கு மாறாக மெதுவான விக்கெட் கொடுக்கப்பட்டது. இங்கு எப்பொழுதும் பந்து நன்றாக பேட்டுக்கு வேகமாக வரும் மேலும் நல்ல பவுன்ஸ் இருக்கும். மேலும் மைதானமும் சிறியது என்பதால் குறைந்தபட்சம் 200 ரன்கள் எடுப்பது சுலபமாக இருக்கும். ஆனால் இதை அப்படியே மாற்றி கொஞ்சம் மெதுவான ஆடுகளத்தை கொடுத்தார்கள்.

இதையும் படிங்க : நாங்க நினைச்ச மாதிரி வாங்கடே மைதானம் இல்லை.. எங்க பலம் என்னன்னு கண்டுபிடிச்சிட்டாங்க – பேட் கம்மின்ஸ்

இதன் காரணமாக நேற்று ஹைதராபாத் அணி பவர் பிளேவில் விக்கெட் ஏதும் இழக்கவில்லை என்றாலும் கூட, அந்த அணியால் 200 ரன்னை நோக்கி செல்ல முடியவில்லை. மேலும் ஹெட் 20 பந்துகளுக்கு மேல் சந்தித்தாலும் கூட 100 ஸ்ட்ரைக் ரேட்டுக்கு கீழேதான் விளையாடி இருந்தார். தற்போது மும்பை ஹைதராபாத் அணியால் மெதுவான ஆடுகளத்தில் சிறப்பாக விளையாட முடியாது என்பதை காட்டி இருக்கிறது. இதை மற்ற அணிகளும் பின் தொடர்ந்தால் ஹைதராபாத் அணி உடனடியாக வெளியேறிவிடும் என்பது குறிப்பிடத்தக்கது!

- Advertisement -