சூப்பர் ஓவர்.. டிராவிட் செய்த மெகா தவறு.. டெல்லிக்கு 10வது பாயிண்ட்.. ரசிகர்கள் விமர்சனம்

0
14
Dravid

நேற்று ஐபிஎல் தொடரில் டெல்லி மற்றும் ராஜஸ்தான் அணிகள் மோதிய போட்டி சூப்பர் ஓவருக்கு சென்றது. இந்த நிலையில் சூப்பர் ஓவரில் ராகுல் டிராவிட் செய்த தவறு அந்த அணி தோல்வி அடைவதற்கு முக்கிய காரணமாக அமைந்தது. இது குறித்து ரசிகர்கள் விமர்சித்து வருகிறார்கள்.

ஐபிஎல் தொடரில் 4 ஆண்டுகள் கழித்து நேற்று மீண்டும் சூப்பர் ஓவருக்கு போட்டி சென்றது. இந்த சூப்பர் ஓவரில் முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணிக்கு ஹெட்மாயர் மற்றும் ரியான் பராக் இருவரும் வந்தார்கள். ஹெட்மாயார் ரியான் பராக்கை ரன் அவுட் செய்தது இல்லாமல் அடுத்து வந்த ஜெய்ஸ்வாலையும் ரன் அவுட் செய்தார். இதனால் ஒரு பந்து மீதம் இருந்த நிலையில் அந்த அணி 11 ரன்கள் மட்டுமே எடுத்தது.

- Advertisement -

டெல்லி அணி ஐந்தாவது வெற்றி

நடப்பு ஐபிஎல் தொடரில் டெல்லி அணி தான் விளையாடி இருந்த 5 போட்டிகளில் தொடர்ந்து நான்கு போட்டிகளை இந்த போட்டிக்கு முன்பாக வென்று 8 புள்ளிகள் உடன் முதல் இடத்தில் இருந்தது. எனவே டெல்லி அணி இந்த போட்டியை வென்றால் ஒரு காலை பிளே ஆப் சுற்றுக்குள் வைத்து விடும் என்பது உறுதியானது. அதே சமயத்தில் ஆறு போட்டிகளில் இரண்டு போட்டிகளை மட்டுமே வென்றிருக்கும் ராஜஸ்தான் இந்த போட்டியை வெல்ல வேண்டியது கட்டாயமாக இருந்தது.

இப்படி இருந்த நிலையில் சூப்பர் ஓவரில் மூன்று பந்துகளை சந்தித்த கேஎல்.ராகுல் 7 ரன்கள் எடுத்தார். அடுத்து வந்த டாப்ஸ் சந்திப் சர்மா பேசிய பந்தை சிக்ஸருக்கு அடிக்க டெல்லி சூப்பர் ஓவரில் போட்டியை வென்றது. மேலும் ஆறு போட்டிகளில் ஐந்து வெற்றிகள் உடன் 10 புள்ளிகள் எடுத்து முதல் இடத்தை தற்போது புள்ளி பட்டியலில் உறுதி செய்தது.

- Advertisement -

டிராவிட் செய்த தவறு

இந்த போட்டியில் ஹெட்மாயர் 20வது ஓவர் என்பது களத்தில் பேட்டிங்கில் இருக்க, அந்த ஓவரை வீசிய ஸ்டார்க் மிகவும் அற்புதமாக வீசியிருந்தார். அவரால் ஸ்டார்க் பந்துவீச்சை சந்தித்து ரன்கள் எடுக்க முடியவில்லை. அவருடைய தடுமாற்றம் வெளிப்படையாகவே தெரிந்தது. இந்த நிலையில் சூப்பர் ஓவரை ஸ்டார்க் வீசுவார் என்று தெரிந்தும் மீண்டும் டிராவிட் ஹெட்மாயரையே அனுப்பியிருந்தார்.

இதையும் படிங்க : நான் 51 பந்தில் 28 ரன் அடித்தும்.. சூப்பர் ஓவரில் ரியான் பராக்கை அனுப்ப காரணம் இதுதான் – நிதீஷ் ரான பேட்டி

அதே சமயத்தில் இந்த போட்டியில் ராஜஸ்தான் அணிக்காக ஜெய்ஸ்வால் மற்றும் நிதிஷ் ரானா இருவரும் அதிரடியாக அரை சதம் அடித்தார்கள். சூப்பர் ஓவரில் இவர்கள் இருவரில் ஒருவரைத்தான் அனுப்பி இருக்க வேண்டும். குறிப்பாக ஜெய்ஸ்வாலை அனுப்பியிருக்க வேண்டும். அவர் ஸ்டார்க்கை மிகச் சிறப்பாக விளையாடி இருந்தார். ராகுல் டிராவிட் இதே போல ஆரம்பப் போட்டிகளில் ஹசரங்காவை பேட்டிங் செய்ய முன்னே அனுப்பியதும் தோல்வியில் முடிந்தது. தற்போது இதுவும் தோல்வி அடைய ரசிகர்கள் அவரது திட்டங்களை விமர்சித்து வருகிறார்கள்!

- Advertisement -