நடப்பு ஐபிஎல் தொடரில் பஞ்சாப் கிங்ஸ் பிளேயிங் லெவனில் கிளன் மேக்ஸ்வெல்லுக்கு தலைமை பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் மீண்டும் வாய்ப்பு தரக்கூடாது என நியூசிலாந்து முன்னாள் வீரர் சைமன் டால் கூறி இருக்கிறார்.
இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு மீண்டும் மேக்ஸ்வெல் நான்கு கோடி ரூபாய்க்கு வாங்கப்பட்டார். இதுவரையில் பஞ்சாப் கிங்ஸ் அணி 5 போட்டிகளில் விளையாடுகிற ஒரு போட்டியில் கூட அவரிடம் எதிர்பார்த்த பேட்டிங் கிடைக்கவில்லை. ஆனால் பந்துவீச்சில் ஒரு முனையில் முடிந்த அளவுக்கு அவர் உதவி செய்கிறார்.
பஞ்சாப் அணிக்கு திடீர் பின்னடைவு
தற்போது பஞ்சாப் கிங்ஸ் அணியில் பேட்டிங் யூனிட்டில் இடம் பெற்று இருக்கும் ஸ்டோய்னிஸ் மற்றும் மேக்ஸ்வெல் இருவரும் பெரிய தாக்கம் எதையும் உருவாக்கவில்லை. இதன் காரணமாக இவர்கள் இருவருடைய இடத்திற்கு ஓமர்சாய் மற்றும் ஜோஸ் இங்லீஷ் இருவரும் கொண்டு வரப்படுவது நல்லது என கருத்துக்கள் எழுந்திருக்கிறது.
இதற்கு அடுத்து பஞ்சாப் அணியில் சுழல் பந்துவீச்சாளர் ஹர்பரித் பிரார் சேர்க்கப்படுவது அணிக்கு கூடுதல் பலத்தை உண்டாக்கும் என்று கிரிக்கெட் வல்லுனர்கள் கூறி வருகிறார்கள். இதற்கு பஞ்சாப் கிங்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் என்ன மாதிரியான முடிவுகளை எடுக்கப் போகிறார் என்பது மிகவும் சுவாரசியமான ஒன்றாக இருக்கும்.
எந்த பயிற்சியாளரையும் விரக்தி அடைய வைக்கும்
இந்த நிலையில் இது குறித்து பேசி இருக்கும் சைமன் டால் கூறும் பொழுது “மேக்ஸ்வெல் வெளியேறுவதற்கான காரணத்தை உருவாக்கி விட்டார் என்று நினைக்கிறேன். தற்போது அவர் ஆட்டம் இழக்கும் முறை ஒரு பயிற்சியாளராக என்னை பெரிய அளவில் விரக்தி அடைய வைக்கும். மேக்ஸ்வெல் ஏமாற்றம் அளிக்கும் வகையில் இருக்கிறார். அவர் ஓமர்சாய்க்கு வாய்ப்பு கொடுப்பதற்கான கதவை திறந்து விட்டு இருக்கிறார். மேலும் ஜோஸ் இங்லீஷ் விளையாட வாய்ப்புகள் உருவாகி இருக்கிறது”
இதையும் படிங்க : ஐசிசி மார்ச் மாதத்திற்கான சிறந்த வீரர் விருது.. ஸ்ரேயாஸ் ஐயர் வென்று அபாரம்
“தற்பொழுது காயத்தால் லாக்கி பெர்குஸன் இல்லாதது அவர்களுக்கு பெரிய பின்னடைவாக அமைந்திருக்கிறது. அவர் ஹைதராபாத் அணிக்காக வெறும் இரண்டு பந்துகள் மட்டுமே வீசினார். அவர் தொடர்ந்து பந்து வீசியிருந்தால் நிச்சயம் தாக்கத்தை ஏற்படுத்தி இருக்க முடியும். அவர் இல்லாததால் அந்த இடத்திற்கு பல பந்துவீச்சாளர்களை கொண்டு வர வேண்டி இருந்தது. வெளிப்படையாக அவர் எப்பொழுது வருவார் என்று தெரியாததால் பஞ்சாப் அணிக்கு பிரச்சினையாக மாறி இருக்கிறது” என்று கூறியிருக்கிறார்.






