தற்போது சிஎஸ்கே அணியில் காயமடைந்த காரணத்தினால் ஐபிஎல் தொடரை விட்டு வெளியேறி இருக்கும் கேப்டன் ருதுராஜ் இடத்திற்கு இளம் வீரர் ஒருவரை சேர்க்க இருப்பதாக உறுதியான செய்திகள் தெரிவிக்கிறது. ஆனால் இந்த செய்தி சிஎஸ்கே வீரர்களை கவலை அடைய வைத்திருக்கிறது.
நடப்பு ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ஜோப்ரா ஆர்ச்சர் பந்துவீச்சில் முழங்கையில் சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் காயமடைந்தார். இருந்தபோதிலும் அடுத்து இரண்டு போட்டிகள் அணிக்காக விளையாடினார். ஆனால் அவர் காயம் பெரிதாக இருக்கின்ற காரணத்தினால் எஞ்சி இருக்கும் ஐபிஎல் தொடரில் இருந்து விலகினார்.
சிஎஸ்கே அணியில் இளம் வீரர்களுக்கு வாய்ப்பு
தற்போது சிஎஸ்கே அணியில் ஷேக் ரசீத், வன்ஸ் பேடி மற்றும் தமிழகத்தைச் சேர்ந்த ஆண்ட்ரே சித்தார்த் என மூன்று வீரர்கள் கவனிக்கத்தக்க வகையில் இருக்கிறார்கள். இந்த மூன்று பேரில் ஒருவருக்காவது சிஎஸ்கே அணியில் இந்த சீசனில் வாய்ப்பு கொடுக்க வேண்டும் என சிஎஸ்கே ரசிகர்கள் சமூக வலைதளங்களில் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகிறார்கள்.
இன்று லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் ஷேக் ரசீத்துக்கு வாய்ப்பு தரப்படுவது குறித்து யோசித்து வருவதாக சிஎஸ்கே தலைமை பயிற்சியாளர் ஸ்டீபன் பிளமிங் கூறியிருக்கிறார். அதே சமயத்தில் சிவம் துபேவுக்கு ஏற்பட்டிருக்கும் காயம் கவலை அளிப்பதாகவும் கூறி இருக்கிறார். அணியில் இருக்கும் சிறந்த வீரர்களான ருதுராஜ் மற்றும் சிவம் துபே இருவரும் இல்லை என்றால் சிஎஸ்கே அணி மேலும் பலவீனமடையும் என்பது ரசிகர்களை கவலை அடைய வைத்திருக்கிறது.
ருதுராஜ் இடத்திற்கு வரப்போவது யார்?
தற்போது ருதுராஜ் இடத்திற்கு மும்பை அணிக்கு ரஞ்சி தொடரில் துவக்க ஆட்டக்காரராக விளையாடி அதிரடி சதம் அடித்த 17 வயதான இடது கை துவக்க ஆட்டக்காரர் ஆயுஸ் மத்ரேவை சிஎஸ்கே அணி நிர்வாகம் கொண்டு வருவதாக உறுதியான செய்திகள் கூறுகிறது. மேலும் தற்போது அவர் அணியுடன் இணைந்து விட்டார் என்றும் தெரிகிறது. ஏற்கனவே ஏலத்திற்கு முன்பாகவே இவரை அழைத்து சிஎஸ்கே பரிசோதித்து வாங்காமல் விட்டது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : தோனி கையில மந்திர கோல் இல்ல.. சிக்ஸர் நிறைய அடிக்கிறது நல்லது கிடையாது – பிளமிங் பேச்சு
இந்த நிலையில் மற்ற ஐபிஎல் அணிகள் அந்தந்த மாநில டி20 லீக்குகளில் சிறப்பாக விளையாடிய வீரர்களை வாங்கி சாதித்துக் கொண்டு இருக்கிறது, ஆனால் சிஎஸ்கே மட்டும் ரஞ்சி டெஸ்ட் தொடரில் சதம் அடித்த வீரரை வாங்குகிறது, எனவே இந்த வீரர் டி20 கிரிக்கெட்டில் அதிரடியாக விளையாடுவாரா? என்ற சந்தேகங்கள் சிஎஸ்கே ரசிகர்களை கவலை அடைய வைத்திருக்கிறது.






