நான் ஐபிஎல் தொடரிலிருந்து விலக இதுவே காரணம்.. இது நிச்சயம் எளிதான முடிவு அல்ல – இங்கி ஹாரி ப்ரூக் பேட்டி

0
638

டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்காக வாங்கப்பட்ட இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் மிடில் வரிசை பேட்ஸ்மேன் ஹாரி ப்ரூக், தொடர் தொடங்குவதற்கு முன்பாக ஐபிஎல் தொடரிலிருந்து விலகுவதாக அறிவித்தார். ஐபிஎல் விதியின் படி இவருக்கு அடுத்த 2 ஆண்டுகள் ஐபிஎல் தொடரில் பங்கு பெறுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த சூழ்நிலையில் ஐபிஎல் தொடரிலிருந்து விலகியதற்கான காரணம் குறித்து அவரே தற்போது சில முக்கிய விஷயங்கள் பேசி இருக்கிறார்.

- Advertisement -

2 ஆண்டுகளுக்கு தடை

நடப்பு ஐபிஎல் தொடரில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி மிகச் சிறப்பாக செயல்பட்டு விளையாடி மூன்று போட்டிகளிலும் வெற்றி பெற்று தற்போது புள்ளி பட்டியலில் வலுவான நிலையில் இருக்கிறது. இந்த சூழ்நிலையில் டெல்லி அணிக்காக கடந்த ஐபிஎல் மெகா ஏலத்தில் வாங்கப்பட்ட இங்கிலாந்து பேட்ஸ்மேன் ஹாரி ப்ரூக் 6.25 கோடி ரூபாய்க்கு வாங்கப்பட்டார். இந்த நிலையில் ஐபிஎல் தொடர் தொடங்க இருந்த சில நாட்களில் திடீரென்று தொடரை விட்டு விலகுவதாக அறிவித்தார்.

சரியான காரணம் இல்லாமல் ஐபிஎல் தொடரில் இருந்து விலகினால் அந்த வீரருக்கு இரண்டு ஆண்டுகள் தொடரில் பங்கேற்க முடியாது என்று பிசிசிஐ புதிய விதியை அறிவித்தது. இதன்படி ப்ரூக் அடுத்த இரண்டு வருடங்களுக்கு ஐபிஎல் தொடரில் விளையாட முடியாது. இந்த சூழ்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பாக அவரை இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் வெள்ளை பந்து கேப்டனாக அறிவித்திருக்கிறது. இந்த சூழ்நிலையில் ஐபிஎல்லில் இருந்து விலகிய காரணம் குறித்து அவரே தற்போது சில முக்கிய விஷயங்கள் பேசி இருக்கிறார்.

- Advertisement -

தொடரில் இருந்து வெளியேற காரணம்

இதுகுறித்து அவர் விரிவாக கூறும்போது ” ஐபிஎல் தொடரிலிருந்து விலக முடிவு செய்த பிறகு இந்த காலகட்டத்தை கடந்து சென்றது சரியான முடிவு. இது எளிதான முடிவு அல்ல என்பது முற்றிலுமான உண்மை. ஆனால் எனது பணச் சுமையை நிர்வகிக்க சரியான முடிவுகளை எடுக்க வேண்டியது அவசியம். கடந்த ஒன்றரை வருடங்களாக நான் நிறைய கிரிக்கெட் விளையாடி இருக்கிறேன். எனவே இனி மேன்மேலும் அதிகமாக இருக்கலாம்.

இதையும் படிங்க:தோனி மீண்டும் கேப்டன் ஆகிறார்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. ருதுராஜுக்கு என்ன நடந்தது? – வெளியான முக்கிய தகவல்

நான் இனி எதிர்காலத்தில் எவ்வளவு பிரான்சைஸ் கிரிக்கெட் விளையாடுவேன் என்று தெரியவில்லை. ஆனால் எப்போதும் எனது முன்னுரிமை இங்கிலாந்து அணிக்காக விளையாடுவதும், இங்கிலாந்து கிரிக்கெட்டில் விளையாட முயற்சி செய்வதும் என அதற்கு முன்னுரிமை கொடுப்பேன்” என்று கூறி இருக்கிறார். இனி அவரே நினைத்தாலும் அடுத்த இரண்டு வருடங்களுக்கு ஐபிஎல் தொடரில் விளையாட முடியாது என்பது குறிப்பிடத்தக்கது

- Advertisement -