தோனி இல்லை லாராதான் என்னை மாற்றினார்.. பாண்டிங் எனக்கு இப்ப செஞ்சது பெரிய விஷயம் – ஷஷான்க் சிங் பேட்டி

0
138
Shashank

பஞ்சாப் கிங்ஸ் அணியின் நட்சத்திர வீரராக உருவெடுத்திருக்கும் ஷஷான்க் சிங் தனக்கு பிரையன் லாரா மற்றும் தனது பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் எவ்வாறு உதவி செய்து இருக்கிறார்கள் என்பது குறித்து பேசி இருக்கிறார்.

நேற்று சிஎஸ்கே அணிக்கு எதிரான போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணி விக்கெட்டுகளை வேகமாக இழந்த நிலையில் ஒரு முனையில் நின்று ஷஷான்க் சிங் மிகச் சிறப்பாக விளையாடி 36 பந்துகளில் 52 ரன்கள் ஆட்டம் இழக்காமல் எடுத்தார். இவரது பொறுப்பான ஆட்டம் பஞ்சாப் கிங்ஸ் அணி வெல்வதற்கான ஸ்கோரை எட்டவைத்தது.

- Advertisement -

திருப்புமுனையான 2024ஆம் ஆண்டு

கடந்த ஆண்டு ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணி வேறொரு ஷஷான்க் சிங் என்ற வீரருக்கு பதிலாக குழப்பத்தில் இவரை வாங்கி விட்டது. பிறகு ஐபிஎல் நிர்வாகம் வாங்கினால் திருப்பி கொடுக்க முடியாது என கூறிவிட்டது. இந்த ஒரு குழப்பம் ஷஷான்க் சிங் கிரிக்கெட் வாழ்க்கையில் மட்டும் இல்லாத பஞ்சாப் கிங்ஸ் அணிக்கும் மிகப்பெரிய மாற்றத்தை கடந்த ஆண்டு உருவாக்கியது.

கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் சிறந்த பேட்டிங் செயல் திறனை இவர் வெளிப்படுத்தியதால் இந்த முறை 5 கோடி ரூபாய்க்கு பஞ்சாப் கிங்ஸ் இவரை தக்க வைத்துக் கொண்டது. இந்த நிலையில் மீண்டும் பேட்டிங்கில் சிஎஸ்கே அணிக்கு எதிராக சிறப்பாக விளையாடி அரை சதம் அணியில் வெற்றிக்கு உதவி இருக்கிறார்.

- Advertisement -

லாரா பாண்டிங் செய்த உதவி

இதுகுறித்து ஷஷான்க் சிங் கூறும் பொழுது ” பிரையன் லாரா எனக்கு பேட்டிங் குறித்து மிக முக்கியமான விஷயத்தை கற்பித்திருக்கிறார். நான் உள்ளே சென்று எவ்வாறு பேட்டிங்கை எடுத்துக் கொள்ள வேண்டும் என்று அவர் எனக்கு கூறியிருக்கிறார். பொதுவாக பினிஷர்கள் பேட்டிங் வரிசையில் ஆறு முதல் எட்டாவது இடங்களில் வருவார்கள். ஆனால் நான் வித்தியாசமானவனாக இருக்கிறேன். ஏனென்றால் நான் பந்தை டைமிங் செய்கிறேன். இதைத்தான் லாரா எனக்கு கூறியுள்ளார்”

இதையும் படிங்க : தோனி பத்தி மனசாட்சி இல்லாம பேசாதிங்க.. நான் சிஎஸ்கே-ல இருக்கப்ப இதுதான் நடந்தது – மொயின் அலி பேச்சு

“இந்த ஆண்டு ஐபிஎல் தொடருக்கு முன்பாக என்னுடன் ரிக்கி பாண்டிங் இருந்தது எனக்கு மிகவும் நல்ல விஷயமாக அமைந்தது. ஏனென்றால் நான் வலைப்பயிற்சியில் மிகவும் நல்ல முறையில் பேட்டிங் செய்யவில்லை. நான் மிகவும் சுமாராக தடுமாற்றத்துடன் இருந்தேன். ஆனால் ரிக்கி பாண்டிங் என் மீது நம்பிக்கை வைத்து எனக்கு விளையாடும் வாய்ப்பை கொடுத்தார்” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -