இன்று ஐபிஎல் தொடரில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சிஎஸ்கே அணி தோல்வி அடைந்தது. சிஎஸ்கே அணியின் இந்த தோல்விக்கு முக்கியமான காரணங்கள் குறித்து அந்த அணியின் ரசிகர்கள் மிக கடுமையான முறையில் சமூக வலைதளங்களில் விமர்சனம் செய்து வருகிறார்கள்.
இந்த குறிப்பிட்ட போட்டியில் முகேஷ் சவுத்ரி இடத்தில் அன்சூல் காம்போஜ் கொண்டு வருவார் என ரசிகர்கள் எதிர்பார்த்தார்கள். ஆனால் தொடர்ந்து முகேஷ் சவுத்ரி விளையாடினார். மீண்டும் அஸ்வினுக்கு ருதுராஜ் பவர் பிளேவில் ஓவர் கொடுத்தார். அந்த ஓவரில் 21 ரன் சென்றது. இதையெல்லாம் தாண்டி பேட்டிங் செய்யும்பொழுது சிஎஸ்கே அணி பெரிய தவறு செய்து தோற்று இருக்கிறது. இது குறித்துதான் சிஎஸ்கே ரசிகர்கள் கடுமையான விமர்சனம் செய்கிறார்கள்.
பஞ்சாப் கிங்ஸ் வித்தியாசமான அணுகுமுறை
இந்த போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணி 5 முக்கிய விக்கெட்டுகளை 83 ரன்களில் இழந்துவிட்டது. ஆனால் மேற்கொண்டு அந்த அணி எந்த இடத்திலும் அதிரடியை நிறுத்தவில்லை. துவக்க ஆட்டக்காரர் பிரியன்ஸ் ஆர்யா அதிரடியாக 41 பந்தில் 103 ரன்கள் குவித்தார். ஷஷான்க் இறுதி வரை களத்தில் நின்று 52 ரன்கள் எடுத்தார். 20 ஓவர்களில் பஞ்சாப் கிங்ஸ் 6 விக்கெட் இழப்புக்கு 219 ரன்கள் குவித்தது.
இந்த போட்டியில் பிரியன்ஸ் ஆர்யா பலமுறை கேட்ச் வாய்ப்பில் இருந்து தப்பினார். பிறகு அதிரடியாக விளையாடி சதமும் அடித்தான். இதே போல ஷஷான்க் சிங் நடுவில் கொடுத்த எளிய கேட்ச் வாய்ப்பை ரச்சின் ரவீந்தரா வீணடித்தார். இதன் காரணமாகவே பஞ்சாப் கிங்ஸ் அணியால் 200 ரன்களை தாண்ட முடிந்தது. சிஎஸ்கே அணியின் பீல்டிங் மிக மோசமாக இருந்தது.
மூன்று ஓவரில் நடந்த பெரிய தவறு
இந்த நிலையில் சிஎஸ்கே அணி ஒரு வழியாக சமாளித்து பேட்டிங்கில் மீண்டும் வந்தது. களத்தில் தான்வே மற்றும் சிவம் துபே இருவரும் இருந்தார்கள். இந்த நிலையில் அந்த அணியின் வெற்றிக்கு ஆறு ஓவர்களில் 81 ரன்கள் தேவைப்பட்டது. சராசரியாக ஓவருக்கு 14 ரன்கள் வீதம் தேவைப்பட்டது.
இந்த நிலையில் 15வது ஓவரில் 6 ரன்கள், 16வது ஓவரில் 7 ரன்கள், 17வது ஓவரில் 9 ரன்கள் என கடைசி ஆறு ஓவரின் முதல் மூன்று ஓவரில் 22 ரன்கள் மட்டுமே வந்தது. இதில் ஒரு பவுண்டரி சிக்ஸர் கூட வரவில்லை. இதன் காரணமாக கடைசி மூன்று ஓவர்களுக்கு 59 ரன்கள் தேவை என்கின்ற கடினமான சூழ்நிலை உருவானது. இதுவே தோல்விக்கு மிக முக்கிய காரணமாக அமைந்திருக்கிறது.
இதையும் படிங்க : 219 ரன் இலக்கு.. பஞ்சாப் இளம் வீரர் அபார சதம்.. முயற்சி செய்த சிஎஸ்கே.. கடைசி வரை போராடிய தோனி.. 18 ரன்னில் சென்னை தோல்வி
தற்போது இருக்கும் சிஎஸ்கே அணியில் பவர் ஹிட்டர்கள் சிவம் துபே மற்றும் தோனியை தவிர வேறு யாருமே கிடையாது. இன்று கான்வே கடைசி நேரத்தில் சிக்ஸர் அடிக்க மிகவும் கடினப்பட்டார். இதையெல்லாம் பார்த்து சிஎஸ்கே ரசிகர்கள் இந்த அணியை கலைத்து விடுங்கள், இந்த அணியால் ப்ளே ஆப் சுற்றிக்குள் நுழைய முடியாது என்பதோடு ஒரு போட்டியை கூட ஜெயிக்க முடியாது என கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார்கள்.






