நடப்பு ஐபிஎல் தொடரின் 21வது லீக் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயின்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் விளையாடின. பரபரப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் லக்னோ அணி 4 ரன் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது.
இந்த சூழ்நிலையில் லக்னோ அணி வெற்றி பெற்ற விதம் குறித்து அதன் கேப்டன் ரிஷப் பண்ட் சில முக்கிய விஷயங்கள் பேசி இருக்கிறார்.
லக்னோ அணி திரில் வெற்றி
கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த லக்னோ அணி 20 ஓவர்கள் முடிவில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி 3 விக்கெட் இழப்புக்கு 238 ரன்கள் குவித்தது. அந்த அணியின் துவக்க வீரர் மிச்சல் மார்ஸ் 48 பந்துகளில் 81 ரன்கள் மற்றும் நிக்கோலஸ் பூரன் 36 பந்துகளில் 87 ரன்கள் குவித்தனர். அதற்குப் பின்னர் வெற்றி இலக்கை நோக்கி கொல்கத்தா அணி களம் இறங்கியது.
ஒரு கட்டத்தில் வெற்றி பெறும் நிலையில் இருந்த கொல்கத்தா அணியை அதன் பின்னர் லக்னோ அணியின் பந்துவீச்சாளர்கள் தங்களது சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தி 4 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற வைத்தனர். கொல்கத்தா அணியை பொறுத்தவரை சுனில் நரேன் 13 பந்துகளில் 30 ரன்கள், கேப்டன் ரகானே 35 பந்துகளில் 61 ரன்கள், வெங்கடேஷ் ஐயர் 29 பந்துகளில் 45 ரன்கள் குவித்தனர். இறுதிக்கட்டத்தில் ரிங்கு சிங் 15 பந்துகளில் 38 ரன்கள் குவித்தார்.
எங்கள் திட்டத்திற்கு விளையாடினோம்
இந்த சூழ்நிலையில் வெற்றி பெற்ற விதம் குறித்து லக்னோ அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் கூறும்போது “நாங்கள் பேட்டிங் செய்து கொண்டிருந்த போது இந்த ஆட்டம் இவ்வளவு நெருங்கி வரும் என்று நாங்கள் எதிர்பார்க்கவில்லை. ஆனால் பவர் பிளேவிற்கு பிறகு நாங்கள் சில விஷயங்களை சரி செய்ய வேண்டி இருந்தது. முதல் டைம் அவுட்க்கு பிறகு நான் உடனே பந்துவீச்சாளர்களிடம் சென்று, உங்கள் திட்டத்திற்கு ஏற்றவாறு செயல்படுங்கள் அதிகமாக முயற்சி செய்ய வேண்டாம்.
இதையும் படிங்க:14 வருடங்கள்.. சிஎஸ்கேவுக்கு நடந்த வினோத சோகம்.. பதிரனாவுக்கு முதல் சம்பவம்.. விராட் சாதனை தூள்
அடிப்படை விஷயங்களை சரியாக செய்யுங்கள் என்று விவாதித்தோம். அதற்குப் பிறகு எங்களது திட்டம் நன்றாகவே வேலை செய்தது. ஆட்டம் எங்களிடமிருந்து வேகமாக சென்று கொண்டிருக்கும்போது அவர்களின் வேகத்தை தடுக்க ஏதாவது ஒன்றை செய்ய வேண்டும். அப்போது உங்களது திட்டம் சில நேரங்களில் வேலை செய்யும், சில நேரங்களில் வேலை செய்யாது. இன்று அது எங்களுக்கு நன்றாக அமைந்தது. எங்கள் பேட்டிங்கில் அப்துல் சமாத்தை நான்காவது வரிசையில் அனுப்பியது குறித்து கேட்கிறீர்கள். வலது இடது காம்பினேஷன் அமைக்க அந்த திட்டத்தை செயல்படுத்தினோம். அதற்கு பின்னர் பேட்டிங் வரிசை நன்றாக உள்ளது” என்று கூறியிருக்கிறார்






