சாம்பியன்ஸ் டிராபி பயிற்சியில் கதறி அழுதேன்.. நான் கேட்ட அதை கொடுக்கல – ஸ்ரேயாஸ் ஐயர் பேச்சு

0
228
Shreyas

நடைபெற்று முடிந்த சாம்பியன்ஸ் டிராபி வலைப்பயிற்சியின் போது தான் கதறி அழுததாக தற்போது ஐபிஎல் தொடரில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு கேப்டனாக செயல்பட்டு வரும் ஸ்ரேயாஸ் ஐயர் ஆச்சரியமான கதையை கூறியிருக்கிறார்.

இந்த ஆண்டு நடைபெற்று முடிந்த சாம்பியன்ஸ் டிராபி தொடரை ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி கைப்பற்றியது. மேலும் இந்திய அணிக்கு அதிக ரன் குவித்தவர் ஆக ஸ்ரேயாஸ் ஐயர் இருந்தார். அவர் 48.06 சராசரியில் மொத்தம் 243 ரன்கள் எடுத்தார். இந்தத் தொடரில் அதிக ரன்கள் எடுத்தவர்கள் பட்டியலில் ரச்சின் ரவிந்தராவுக்கு அடுத்து வந்தார்.

- Advertisement -

விராட் கோலியால் மாறிய கதை

சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கு முதலில் ஜெய்ஸ்வால் துவக்க ஆட்டக்காரர் ஆகவும், கில் மூன்றாவது இடத்தில் பேட்டிங் செய்வார் எனவும் முடிவு செய்யப்பட்டது. இதன் காரணமாக இங்கிலாந்து ஒருநாள் தொடரில் இவ்வாறு இந்திய பேட்டிங் ஆர்டர் அமைக்கப்பட்டது. இதனால் ஸ்ரேயாஸ் ஐயருக்கு இந்திய பேட்டிங் யூனிட்டில் பிளேயிங் லெவனில் இடம் இல்லாமல் போனது.

இந்த நிலையில் இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடரின் முதல் போட்டிக்கு முன்பாக விராட் கோலி திடீரென காயமடைந்தார். எனவே ஸ்ரேயாஸ் ஐயர் அதிர்ஷ்டவசமாக விளையாடும் வாய்ப்பை பெற்றார். அங்கிருந்து ஸ்ரேயாஸ் ஐயர் யாரும் எதிர்பார்க்காத வகையில் சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தினார். தொடர்ந்து சாம்பியன்ஸ் டிராபியிலும் இந்திய அணிக்கு அதிக ரன் குவித்தவராக வந்தார்.

- Advertisement -

இதற்காக உண்மையில் அழுதேன்

இது குறித்து ஸ்ரேயாஸ் ஐயர் கூறும் பொழுது “சாம்பியன்ஸ் டிராபியின் போது நான் கடைசியாக அழுதேன். அந்தத் முதல் பயிற்சி அமர்வின் போது அது நடந்தது. நான் வலையில் பேட்டிங் செய்து கொண்டிருந்த பொழுது எனக்கு அது நல்ல முறையில் செல்லவில்லை. இதனால் நான் என் மீது மிகவும் கோபமாக இருந்தேன். இதைத் நான் அழ ஆரம்பித்தேன். மேலும் எளிதில் நான் அழக் கூடியவன் கிடையாது என்பதால் இது எனக்கு அதிர்ச்சியாக இருந்தது”

இதையும் படிங்க : மும்பை பேட்ஸ்மேன்கள் சும்மா விட மாட்டாங்க.. இதை மனசுல வெச்சு கடைசி ஓவரை பாண்டியாவுக்கு கொடுத்தேன் – ஆர்சிபி கேப்டன்

“இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் நான் சிறப்பாக விளையாடியிருந்ததை அப்படியே எடுத்துச் செல்ல முடியும் என்று நினைத்தேன். ஆனால் துபாயில் இருந்த கண்டிஷனுக்கு உடனே மாறுவது கடினமாக இருந்தது. இந்த நிலையில் நான் கூடுதலாக பயிற்சி செய்வதற்கு விரும்பினேன். ஆனால் எனக்கு அது கிடைக்கவில்லை. இதனால் கோபத்தில் நான் இறுதியில் அழுதுவிட்டேன்” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -