நடப்பு ஐபிஎல் தொடரில் நாளை சிஎஸ்கே அணி பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிராக சண்டிகர் முல்லன்பூர் மைதானத்தில் விளையாடுகிறது. இந்த போட்டிக்கு சிஎஸ்கே பிளேயிங் லெவன் எவ்வாறு மாற்றி அமைக்கப்படலாம் என்பது குறித்து பார்க்கலாம்.
இதுவரையில் இந்த ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணி விளையாடி இருக்கும் நான்கு போட்டிகளில் முதல் போட்டியை வென்று தொடர்ந்து மூன்று போட்டிகளை தோற்று இருக்கிறது. இதில் இரண்டு போட்டிகள் தங்களது சொந்த மைதானத்தில் விளையாடி தோற்று இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது சிஎஸ்கே அணியின் செயல்பாடு சொந்த ரசிகர்களால் பெரிய விமர்சனத்திற்கு உள்ளாகி வருகிறது.
இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கொடுங்கள்
இந்த முறை உருவாக்கப்பட்டு இருக்கும் சிஎஸ்கே அணியால் ப்ளே ஆப் சுற்றுக்கு செல்ல முடியாது என சிஎஸ்கே ரசிகர்கள் இரண்டாவது போட்டியிலேயே சொல்லும் அளவுக்கு மோசமான அணியாக இருக்கிறது. எனவே தோல்வியாக இருந்தாலும் பரவாயில்லை இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கொடுங்கள் என சிஎஸ்கே ரசிகர்கள் கேட்டு வருகிறார்கள். அந்த அணியில் ஷேக் ரஷீத் மற்றும் வன்ஸ் பேடி என இரண்டு இளம் பேட்ஸ்மேன்கள் இருக்கிறார்கள். ஆனால் இவர்களுக்கு வாய்ப்பு கிடைப்பது கொஞ்சம் கடினம்தான்.
அதே சமயத்தில் கேப்டன் ருதுராஜ் களத்தில் மிக மோசமான முடிவுகளை தொடர்ந்து எடுத்து வருகிறார். அணித் தேர்வு மற்றும் பந்துவீச்சாளர்களை சுழற்றி பயன்படுத்துவதில் நிறைய அடிப்படைத் தவறுகள் செய்கிறார். இதனால் ஆன்ஃபீல்டு கேப்டன்சியிலும் சிஎஸ்கே கேப்டன் முன்னேற வேண்டிய அவசியம் இருக்கிறது.
என்ன மாற்றம் ஏற்படலாம்?
டெல்லி அணிக்கு எதிரான கடந்த போட்டியில் கான்வே மற்றும் வேகப்பந்துவீச்சாளர் அன்சூல் காம்போஜ் இருவரும் வரவேண்டும் என வெளியிலிருந்து எல்லோரும் கூறினார்கள். ஆனால் கான்வே மட்டுமே கொண்டுவரப்பட்டார். அன்சூல் காம்போஜ் இடத்திற்கு ருதுராஜின் மகாராஷ்டிராவை சேர்ந்த முகேஷ் சவுத்ரி விளையாடினார். ஆனால் அவரது தேர்வு பெரிய விமர்சனங்களை உருவாக்கியது.
எனவே நாளைய போட்டியில் ஒரே ஒரு மாற்றமாக முகேஷ் சவுத்ரி நீக்கப்பட்டு, அவருடைய இடத்திற்கு இளம் வேகப்பந்துவீச்சாளர் அன்சூல் காம்போஜ் கொண்டுவரப்படலாம் என்று நம்பப்படுகிறது. மேலும் அணியின் மூத்த வீரர்களான மகேந்திர சிங் தோனி மற்றும் ரவிச்சந்திரன் அஸ்வின் இருவருமே நாளைய போட்டியில் விளையாடுவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளது.
இதையும் படிங்க: மற்ற அணிகளை இந்த விஷயத்தில் நாங்கள் மதிப்பதில்லை.. அதனால்தான் தொடர்ந்து தோற்று வருகிறோம் – சன்ரைசர்ஸ் கோச்
சிஎஸ்கே பிளேயிங் லெவன்: ருதுராஜ், கான்வே, ரச்சின் ரவீந்தரா, சிவம் துபே, விஜய் சங்கர், ரவீந்திர ஜடேஜா, தோனி ரவிச்சந்திரன் அஸ்வின், அன்சூல் காம்போஜ், நூர் அகமத் மற்றும் கலீல் அகமத். மேலும் இம்பேக்ட் பிளேயராக மதிஷா பதிரனா.






