நேற்று நடைபெற்ற 15 வது ஐபிஎல் கிரிக்கெட் லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 80 ரன் வித்தியாசத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியிடம் தோல்வி அடைந்தது.
இந்த சூழ்நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரர் வீரேந்திர சேவாக் சன்ரைசர்ஸ் அணி குறித்து சில முக்கிய கருத்துக்களை கூறியிருக்கிறார்.
சன்ரைசர்ஸ் படுதோல்வி
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி இந்த ஐபிஎல் தொடரில் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் களம் இறங்கியது. ஏனென்றால் கடந்த ஐபிஎல் சீசனில் அதிரடியான ஆட்டத்திற்கு பெயர் பெற்று இறுதி போட்டி வரை முன்னேறி கொல்கத்தா அணியிடம் எதிர்பாராத விதமாக தோல்வியை தழுவியது. எனவே இந்த சீசனிலும் அதே அதிரடியை தொடர்ந்த சன் ரைசர்ஸ் அணி முதல் போட்டியில் சிறப்பான வெற்றியை பதிவு செய்த நிலையில் அடுத்த மூன்று போட்டிகளில் எதிர்பாராத தோல்வியை சந்தித்து தற்போது மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ளது.
அதிலும் கொல்கத்தாவில் நடைபெற்ற ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த கேகேஆர் 200 ரன்கள் குவிக்க, வெற்றி இலக்கை நோக்கி விளையாடிய சன்ரைசர்ஸ் வெறும் 16 ஓவர்களில் 120 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இந்த சூழ்நிலையில் வீரேந்திர சேவாக் சன்ரைசர்ஸ் அணி குறித்து தனது அதிருப்தியை வெளிப்படுத்தி இருக்கிறார். மேலும் பணம் கொடுத்து டிக்கெட் வாங்கி மைதானத்திற்கு வரும் ரசிகர்களை ஏமாற்றும் வகையில் விளையாட வேண்டாம் எனவும் அவர் கூறியிருக்கிறார்.
ரசிகர்களை ஏமாற்ற வேண்டாம்
இதுகுறித்து அவர் விரிவாக கூறும்போது “ஹைதராபாத் அணி மீண்டும் ஏமாற்றம் அளித்துள்ளது. நான் என்ன சொல்ல முடியும்? அவர்களிடம் ஏராளமான பேட்ஸ்மேன்கள் இருக்கிறார்கள். யாராலும் ரன்கள் எடுக்க முடியவில்லை. 120 ரன்களில் ஆட்டம் இழக்கிறார்கள். பணம் செலுத்தி ரசிகர்கள் உங்களைக் காண மைதானத்திற்கு வந்துள்ளனர். ஆம் போட்டி கொல்கத்தாவில் நடைபெற்றது தான்.
இதையும் படிங்க:நாளை தோனி மீண்டும் கேப்டன் ஆகிறார்.. மைக் ஹசி தகவல்.. ஓய்வு பெறுவதற்கான திட்டமா?.. சிஎஸ்கே ரசிகர்கள் கவலை
ஆனால் ஹைதராபாத் அணிக்கு ஒரு நல்ல பெயர் உண்டு. அவர்கள் எப்போதும் ரசிகர்களை மகிழ்விக்கும் வகையில் விளையாடுவார்கள். ஆனால் அது இங்கே காணாமல் போய்விட்டது. கேகேஆர் அணியின் பந்துவீச்சு பெரிய தாக்குதல் நடத்தும் அளவுக்கு இல்லை. மேலும் ஆடுகளம் சமாளித்து விளையாடக்கூடிய அளவில் இருந்தது. முதலில் விளையாடிய கேகேஆர் 200 ரன்கள் குவித்தது. பின்னர் ஆடுகளத்தின் சூழ்நிலையைப் புரிந்து அதற்கு ஏற்றவாறு விளையாடியிருந்தாலே வெற்றி பெற்று இருக்கலாம்” என்று ஷேவாக் கூறுகிறார்.






