நடப்பு ஐபிஎல் தொடரில் ஹைதராபாத் அணியின் அதிரடி தொடக்க ஆட்டக்காரர்கள் டிராவிஸ் ஹெட் மற்றும் அபிஷேக் ஷர்மா இருவரும் ரன்கள் எடுக்க சிரமப்படுவதற்கு காரணம் என்ன என்பது குறித்து இந்திய முன்னால் வீரர் முகமது கைப் கூறியிருக்கிறார்.
இந்த முறை ஐபிஎல் தொடரில் முதல் அணியாக ஹைதராபாத் ஒரு போட்டியில் 300 ரன்கள் எடுத்த அணியாக மாறும் என பலரும் எதிர்பார்த்தார்கள். எதிர்பார்ப்புக்கு தக்கபடி அந்த அணியை முதல் போட்டியில் 286 ரன்கள் எடுத்தது. இதற்கு அடுத்து விளையாடிய மூன்று போட்டிகளிலும் அந்த அணி தற்பொழுது தோல்வியடைந்து அதிர்ச்சியை கொடுத்திருக்கிறது.
ஹைதராபாத் அணியின் திட்டம்
டி20 கிரிக்கெட் உலகில் மிகவும் அதிரடியான பேட்ஸ்மேன்களை கொண்டு முதல் பந்தில் இருந்து தாக்கி விளையாடுவது ஹைதராபாத் அணியின் திட்டமாக கடந்த ஆண்டு முதல் இருந்து வருகிறது. தற்போது அந்த அணியில் முதல் ஐந்து இடத்தில் இருக்கும் பேட்ஸ்மேன்கள் அதிரடியில் எதிரணியிடமிருந்து ஆட்டத்தை பறிக்கும் அளவுக்கு சிறப்பானவர்கள்.
இதில் தொடக்க ஆட்டக்காரர்களான அபிஷேக் சர்மா மற்றும் ஹெட் இருவரும் முக்கியமானவர்கள். இவர்கள் பவர் பிளேவில் குறைந்தது 75 ரன்கள் முதல் 100 ரன்கள் வரை எடுக்க கூடியவர்கள். இவர்கள் கொடுக்கும் இந்த அதிரடி துவக்கத்தை பயன்படுத்திக் கொண்டு மற்ற ஹைதராபாத் பேட்ஸ்மேன்கள் பெரிய ரன்களுக்கு செல்வார்கள். கடந்த ஆண்டு முதல் அவர்களது டெம்ப்ளேட்டாக இது இருந்து வருகிறது.
இருவர் பலவீனம் தெரிந்து விட்டது
இந்த ஜோடி குறித்து பேசி இருக்கும் முகமது கைப் கூறும் பொழுது “கடந்த முறை ஹெட் மற்றும் அபிஷேக் சர்மாவுக்கு எதிராக எந்த அணியும் தயாராக இல்லை. எனவே இவர்கள் பவர் பிளேவில் 100 ரன்கள் வரை எடுத்தார்கள். இப்பொழுது அணிகள் தயாராக இருக்கின்றன அவர்களிடம் நான் திட்டங்களை பார்க்கிறேன். அபிஷேக் ஷர்மாவுக்கு ஷார்ட் பந்து மற்றும் மெதுவான பந்துகளை வீசுகிறார்கள்”
இதையும் படிங்க : ஜெய்ஸ்வால் ரகானே கிட் பேக்கை எட்டி உதைத்தாரா.. மும்பை அணியை விட்டு வெளியேற காரணம் என்ன?.. வெளியான தகவல்
“மேலும் ஹெட்டுக்கு நன்றாக மேலே பந்து வீசி ஆட வைக்கிறார்கள். இந்த வகையில் அணிகள் மிகச் சிறந்த திட்டங்களுடன் போட்டிக்கு வருகிறார்கள். எனவே ஹைதராபாத் தொடக்க ஜோடிக்கு இந்த முறை நிறைய சவால் இருப்பதாக நினைக்கிறேன். அணிகளுக்கு இவர்களுக்கு எதிராக எப்படி பந்துவீச வேண்டும் என்று தெரிகிறது. தற்போது பேட்டிங் மற்றும் பந்துவீச்சு என இரண்டிலும் ஹைதராபாத் முன்னோக்கி செல்வது சிரமமான காரியம்” என்று கூறி இருக்கிறார்.






