நடப்பு ஐபிஎல் தொடரை பொருத்தவரை ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயின்ஸ் அணி இதுவரை மூன்று போட்டிகளில் விளையாடி ஒரு போட்டியில் வெற்றியும் இரண்டு போட்டிகளில் தோல்வியும் தழுவி சிக்கலான நிலையில் இருக்கிறது.
இந்த சூழ்நிலையில் 1983 ஆம் ஆண்டு இந்திய அணி உலகக்கோப்பை வென்ற போது அதில் விளையாடிய தற்போதைய முன்னாள் வீரர் ரிஷப் பண்ட் குறித்து சில கருத்துக்களை கூறியிருக்கிறார்.
ரிஷப் பண்ட் எதிர்கொள்ளும் சிக்கல்
கடந்த ஆண்டு லக்னோ அணிக்கு கேஎல் ராகுல் கேப்டனாக இருந்த நிலையில், லக்னோ அணியின் உரிமையாளர் சஞ்சீவ் கோயங்கா அணி தோல்வி அடையும் போதெல்லாம் கேப்டன் கேஎல் ராகுலிடம் வாக்குவாதத்தில் ஈடுபடுவதை காண முடிந்தது. இதன் காரணமாகவே கேஎல் ராகுல் லக்னோ அணிக்காக விளையாடவில்லை என்பது வெளியே தெரியாவிட்டாலும் அது ஒரு மறுக்க முடியாத உண்மையாகவே உள்ளது. இந்த நிலையில் அவருக்கு பதிலாக ரிஷப் பண்ட் 27 கோடி ரூபாய்க்கு வாங்கப்பட்டு கேப்டனாகவும் நியமிக்கப்பட்டார்.
இருப்பினும் முதல் மூன்று போட்டிகள் அவருக்கு சரியாக அமையவில்லை. ரன்கள் எடுப்பதிலும் ஒரு கேப்டனாகவும் தொடர்ந்து தடுமாறி வருகிறார். மேலும் சரியான பந்துவீச்சாளர்கள் இல்லாததும் அந்த அணிக்கு பெரிய பிரச்சினையாக உள்ளது. இந்த சூழ்நிலையில் கடந்த பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் லக்னோ அணி தோல்வி அடைந்த பிறகு அணியின் உரிமையாளர் சஞ்சீவ் கோயங்கா ரிஷப் பண்டிடம் விவாதிப்பதை காண முடிந்தது.
ஃப்ரீயா விளையாட விடுங்க
இந்த சூழ்நிலையில் கடந்த வருடம் கேஎல் ராகுல் அனுபவித்த சிக்கலை இந்த வருடம் ரிஷப் பண்ட் அனுபவித்து வருகிறார் என்று ரசிகர்கள் தங்களது கருத்துக்களை கூறி வருகின்றனர். இந்த சூழ்நிலையில் 1983 ஆம் ஆண்டு இந்திய அணி உலக கோப்பையை வென்ற போது அதில் விளையாடிய மதன் லால், சஞ்சீவ் கோயங்கா மற்றும் ரிஷப் பண்ட் குறித்து சில முக்கிய கருத்துக்களை கூறியிருக்கிறார். இவர்களுக்கு இடையே என்ன நடந்தாலும் அது ட்ரெஸ்ஸிங் ரூமில் மட்டும் இருக்க வேண்டுமே தவிர வெளியே தெரியும் அளவில் இருக்கக் கூடாது என சில விமர்சனங்களையும் வைத்திருக்கிறார்.
இதையும் படிங்க:தோனி தனது சம்பளத்தை விட 10 மடங்கு அதிகமா இந்த வேலையை செய்யுறாரு.. குற்றம் சொல்ல முடியாது – ஆஸி கிளார்க்
இது குறித்து அவர் விரிவாக கூறும்போது “ரிஷப் பண்ட் மற்றும் திரு சஞ்சீவ் கோயங்கா இருவருக்கும் இடையே நடந்த விவாதம் குறித்து எனக்கு தெரியவில்லை. இது அனைத்துமே ட்ரெஸ்ஸிங் ரூமில் மட்டுமே நடக்க வேண்டும். அணியின் சிறுவர்கள் விளையாட்டை ரசிக்கட்டும், அவர்கள் அனைவரும் சுதந்திரமாக விளையாடட்டும். டி20 கிரிக்கெட் எப்போதுமே மிகவும் கணிக்க முடியாத வகையில் இருக்கிறது” என்று அவர் கூறியிருக்கிறார். எனவே வீரர்கள் விளையாட்டை அனுபவித்து விளையாட வேண்டும் என, மதன்லால் கூறியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.






