2027 உலககோப்பை வரை விளையாடுவேன்.. அது தான் என் குறிக்கோள்.. விராட் கோலி கருத்து

0
13

ஐபிஎல் தொடரில் ஆர்சிபி அணி விளையாடிய 2 போட்டிகளிலும் வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் முதலிடத்தில் இருந்தாலும், விராட் கோலியின் பேட்டிங் மிகப்பெரிய விமர்சனத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

குறிப்பாக சிஎஸ்கேவுக்கு எதிரான போட்டியில் விராட் கோலி பேட்டிங்கில் தடுமாறியதாகவும் அவர் முன்பே ஆட்டமிழந்த  ஆர் சி பி அணி 200 ரன்களுக்கு மேல் குவித்து இருக்கும் என்று ரசிகர்கள் கிண்டல் அடித்து வந்தனர். இந்த நிலையில் நாளை பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் ஆர்சிபி அணி குஜராத் அணியை எதிர்கொள்கிறது.

- Advertisement -

அடுத்த குறிக்கோள் இது தான்:

இந்த போட்டி தொடர்பான நிகழ்ச்சி ஒன்று, பெங்களூருவில் நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட விராட் கோலியிடம் தங்களது எதிர்கால திட்டம் என்ன என்பது குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த விராட் கோலி, என்னுடைய அடுத்த பெரிய திட்டம் என்னவென்று கேட்கிறீர்கள்.

அது எனக்கு தெரியவில்லை. வேண்டுமானால் அடுத்த உலக கோப்பையை இந்திய அணிக்காக வென்று தரவேண்டும் என்பதாக இருக்கலாம் என்று கோலி பதில் அளித்தார். இதற்கு ரசிகர்கள் வரவேற்பு அளித்தனர். இதைத் தொடர்ந்து ஆஸ்திரேலியா தொடரில் இந்திய அணி தோல்வி தழுவியது குறித்து விராட் கோலி இடம் கேள்வி கேட்கப்பட்டது.

- Advertisement -

இதற்கு பதில் அளித்த கோலி, ஆஸ்திரேலியா தொடர் எனக்கு மிகப்பெரிய ஏமாற்றத்தை கொடுத்திருக்கிறது. அந்த ஏமாற்றம் இன்னும் என் மனதில் புதியதாக இருக்கின்றது. இனி நான் எப்போது ஆஸ்திரேலியா சுற்றுப்பயணத்திற்கு செல்வேன் என்று தெரியாது.
அடுத்த நான்கு ஆண்டுகளில் ஆஸ்திரேலிய மண்ணில்  எந்த ஒரு டெஸ்ட் போட்டியும் இல்லை.

கோலி vs சச்சின் ரெக்கார்ட்:

இதனால் எனக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு கிடைக்குமா என்று எனக்கு தெரியவில்லை. எனினும் நம் வாழ்க்கையில் என்ன நடக்கிறதோ அதை சில சமயம் நாம் ஏற்றுக்கொண்டு தான் ஆக வேண்டும்  என்று விராட் கோலி தெரிவித்துள்ளார். விராட் கோலி கடந்த 2023 உலகக் கோப்பை தொடரில் 11 இன்னிங்ஸ் ஆடி 765 ரன்கள் அடித்திருந்தார். இதில் மூன்று சதம், 6 அரை சதம் அடங்கும். இதன் மூலம் ஒரு உலகக் கோப்பை தொடரில் அதிக ரன்கள் அடித்த வீரர் என்ற சாதனையை கோலி படைத்து இருந்தார்.

இதையும் படிங்க: நண்பர் ஏற்படுத்திய பிரச்சனை.. சிஎஸ்கே வீடியோவை நீக்கிய அஸ்வின்.. ரசிகர்கள் சரமாரி விமர்சனம்

விராட் கோலி மீண்டும் 2027 ஆம் ஆண்டு உலகக் கோப்பை தொடரில் நடைபெற்றதால், அவர் சச்சின் சாதனையை முறியடிக்க வாய்ப்பு இருக்கிறது. சச்சின் உலகக்கோப்பை வரலாற்றில் 44 இன்னிங்சில் 2278 ரன்கள் அடித்திருக்கிறார். கோலி 1795 ரன்கள் அடித்திருக்கிறார். சச்சினின் சாதனை முறியடிக்க விராட் கோலிக்கு 484 ரன்கள் தேவைப்படுகிறது.

- Advertisement -